Rights for HR Defenders

மனித உரிமை காப்பாளர்க்கான உரிமைகள் 

பிரிவு –

மனித உரிமைகளை அடிப்படைச் சுதந்திரங்களை தனியாகவோ கூட்டாகவோ அறிந்துணர்ந்து வளர்த்தெடுக்கவும், பாதுகாக்க‍வும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 

பிரிவு –

அ) தன் ஆளுகைக்குட்பட்ட மக்க‍ள் அனைவரும் தனியாகவோ கூட்டாகவோ அனைத்து மனித உரிமைகளையும், அடிப்ப‍டைச் சுதந்திரங்களையும் நடைமுறையில் அனுபவிக்க‍த் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சமூக பொருளாதார அரசியல் மற்றும் பிற தளங்களில் சட்ட‍ரீதியான உத்த‍ரவாதத்துடன் நடைமுறைப்படுத்த‍ வேண்டிய தலையாய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு அரசுக்கும் உண்டு. 

ஆ) இப்பிரகடனத்திலுள்ள‍ உரிமைகளையும் சுதந்திரங்களையம் உறுதியாக நடைமுறைப்படுத்த‍ப்படும் என்பதற்கான சட்ட‍ம், நிர்வாகம் மற்றும் தேவையான பிற நடவடிக்கைகளை ஒவ்வொரு அரசும் மேற்கொள்ள‍ வேண்டும். 

பிரிவு – 3

உள்நாட்டுச் சட்ட‍ம், ஐ.நா சாசனம் மற்றும் சர்வதேச சட்ட‍ங்களின் படி மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும், தனது சட்ட‍வரம்பிற்குள் நடைமுறையில் அனுபவிக்க‍ கூடிய மனித உரிமைகள் அடிப்படைச் சுதந்திரங்களை ஆகியவற்றின் அனைத்து செயல்பாடுகளும் அமைய வேண்டும் பிரகடனத்தினுள்ள‍ படி உரிமைகளையும் சுதந்திரங்களையும் அறிந்துணர்ந்து வளர்த்தெடுத்துப் பாதுகாத்து பயனளிக்குமாறு வழிநடத்த‍ப்பட வேண்டும். 

பிரிவு – 4

தற்போதுள்ள‍ பிரகடனத்திலுள்ள எதுவும் ஐ.நா சாசனத்தின் நோக்க‍ங்களையோ கொள்கைகளையோ பலவீனப்படுத்துவதாலோ அல்ல‍து மறுப்ப‍தாகவோ மேலும் அகில உலக மனித உரிமைப் பிரகடனம் மற்றும் மனித உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கைகள் பிற சர்வதேச முறையாவணம் மற்றும் பிரயோகிக்க‍த்தக்க‍ உறுதிமொழிகள் ஆகியவற்றின் சட்ட‍ விதிகளை கட்டுப்படுத்துவதற்காகவோ அல்ல‍து குறைப்ப‍தற்காகவோ என்று கருதக் கூடாது. 

பரிவு – 5

மனித உரிமையகள் அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகியவற்றை வளர்த்தெடுத்துப் பாதுகாக்கும் நோக்குடன் தனியாகவோ கூட்டாகவோ செயல்பட ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 

அ) ஒருவரையொருவர் சந்திக்க அல்ல‍து அமைதியாக கூட 

ஆ) அரசு சார்பற்ற‍ அமைப்புகள் சங்கங்கள் குழுக்களை உருவாக்க‍வும், அவற்றில் உறுப்பினராகச் சேரவும், பங்கேற்கவும் 

இ) அரசு சார்பற்ற‍ அமைப்புக்களோடும் அரசு நிறுவனங்களோடும் தொடர்பு கொள்ள 

பிரிவு – 6

ஒவ்வொருவருக்கும் தனியாகவோ பிறருடன் சங்கமாகவோ இணைந்து செயல்பட உரிமையுண்டு. 

அ) மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிய, பெற்றுக் கொள்ள, ஏற்றுக் கொள்ள‍வும் மற்றும் உள்நாட்டு சட்ட‍ நீதி மற்றும் நிர்வாக முறையில் இந்த உரிமைகளும் சுதந்திரங்களும் இடம் பெற்றுள்ள‍ன என்பதனை அறிவதற்கான உரிமையுண்டு. 

ஆ) மனித உரிமைகள் மற்றும் நடைமுறைப்படுத்த‍ப்படுகின்ற மனித உரிமை ஆவணங்களில் உள்ள‍ மனித உரிமைகளை அடிப்படை சுதந்திரங்கள் பற்றிய பிறரின் கருத்துக்களை தகவல்களை விவரங்களை தாராளமாகப் பிரசுரிக்க‍ பரப்ப‍ தெரிவிக்க உரிமையுண்டு. 

இ) அனைத்து மனித உரிமைகள் அடிப்படைச் சுதந்திரங்களையும் ஆகியவை சட்ட‍ரீதியாகவும் நடைமுறையிலும் பின்பற்றப்படுவதை ஆய்வுசெய்ய கலந்தாலோசிக்க மக்க‍ள் கருத்துக்களை உருவாக்க கடைப்பிடிக்க‍ சரியான வழிமுறைகளில் சமுதாயத்தின் கவனத்தை இக்கருத்துக்களின் பால் ஈர்க்க‍ச் செய்ய உரிமையுண்டு. 

பிரிவு –

மனித உரிமைகளை வளர்த்தெடுக்க‍வும் தனியாகவோ கூட்டாகவோ கலந்தாலோசித்து புதிய சிந்தனைகளையும் கொள்கைகளையும் ஏற்கத் தரும் வகையில் அறிவுறுத்த உரிமையுண்டு. 

பிரிவு –

அ) தனியாகவோ கூட்டாகவோ பாகுபாடு காட்ட‍ப் பெறாமல் தான் சார்ந்த நாட்டின்  அரசாங்கத்திலும் பொதுநலப் பிரச்சனைகளிலும் பங்கேற்ற உரிமையுண்டு. 

ஆ) தனியாகவோ கூட்டாகவோ அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படும் வகையில் ஆக்க‍ப்பூர்வ விமர்சனங்களையும் திட்ட‍ங்களையும் சமர்ப்பிக்க‍வும் மற்றும் மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்களை வளர்த்தெடுத்துப் பார்துகாக்கும் பணியில் உருவாகும் தடைகளைச் சுட்டிக்காட்டவும் உரிமையுண்டு. 

பிரிவு –

  1. தனியாக மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் அனுபவிக்க‍வும் இவ்வுரிமைகளை வளர்த்தெடுத்து பாதுகாக்க‍வும் அனைவர்க்கும் உரிமையுண்டு உரிமைகள் மீறப்படுகின்றபோது சரியான தீர்வைப் பெறவும் பாதுகாப்புப் பெறவும் உரிமையுண்டு.
  1. உரிமைகளும் சுதந்திரங்களுடன் மீறப்பட்ட‍தாக சொல்ல‍ப்படுவதை அவர்கள் நேரிலோ அல்ல‍து சட்ட‍ப்படி அவர்களால் அதிகாரம் அளிக்க‍ப்பட்ட‍ பிரதிநிதி மூலமாக புகார் கொடுக்க‍லாம் மேலும் அந்த புகாரை ஒரு சுதந்திரமான நடுநிலையான தகுதிவாய்ந்த நீதித்துறையைச் சார்ந்த சட்ட‍ப்படி உருவாக்க‍ப்பட்ட‍ அதிகார நிலையிலோ பொது விசாரணையிலோ விசாரிக்க வைத்து அந்த நபரின் உரிமைகளை அல்ல‍து சுதந்திரங்கள் மீறப்பட்டிருக்கிறது எனில் அந்த நீதி அதிகாரியிடமிருந்து நிவாரணத் தொகை ஏதும் இருப்பின் அது உள்ளிட்ட‍ குறையை நிவர்த்தி செய்யும் தீர்ப்பை ஒன்றை பெறவும் அந்த இறுதி தீர்ப்பு கால தாமதம், இல்லாமல்ல் செயல்படுத்த‍ ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
  1. மேற்கண்டவை போல இதே முடிவைத் தனியாகவோ கூட்டாகவோ பெற ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

அ) மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்கள் ஆகியன தனி அதிகாரிகளாலோ அரசு எந்திரங்களாலோ கொள்கை அளவில் அல்ல‍து செயல் அளவில் மீறப்பட்டால் அது தொடர்பாக அந்நாட்டின் தகுதிவாய்ந்த நீதி, நிர்வாக மன்ற சட்ட‍மன்றம் போன்ற சட்ட‍ப்பூர்வ அதிகார அமைப்புகளிடமோ அல்ல‍து தகுதி வாய்ந்த அதிகார நிலையில் உள்ள‍வர்களிடம் தகுதிவாய்ந்த அதிகார நிலையில் உள்ள‍வர்களிடம் அளிக்க‍ப்படும் புகார் மீதான தீர்ப்புகள் காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும். 

ஆ) பொது விசாரணையில் வாதப் பிரதிவாதங்களை தேசிய சட்ட‍த்திற்கும் சர்வதேச கடப்பாடுகளுக்கும் உறுதிமொழிகளுக்கும் பொருந்துவதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளல். 

இ) திறன் வாய்ந்த வழக்குரைஞர் மூலம் சட்ட‍ உதவிகளை வழங்குதல் அல்ல‍து மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள்சார்ந்த பொருத்த‍மான அறிவுரைகள் வழங்கி துணை புரிதல் 

  1. சர்வதேச மனித உரிமை ஆவணங்கள் மற்றும் வழிமுறைகளின்படி தனியாகவோ, கூட்டாகவோ தங்குதடையின்றி சர்வதேச அமைப்புக்களை அணுகவும், தகவல் பெறவும் மனதி உரிமைகள் அடிப்படைச் சுதந்திரங்கள் பற்றியச் செய்திகளைப் பொதுவாகவோ சிறப்புக் கவனத்துடனோ பரிசீலிக்க‍
  1. அரசின் ஆளுகைக்குட்பட்ட‍ பகுதியில் மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகியன மீறப்படுகின்றன என்று உறுதியாக நம்புவதற்கான சூழல் உருவாகிற போதெல்லாம் ஒரு விசாரணை நடைபெறுகிறது என்பதை உறுதி செய்ய நடுநிலையான விசாரணையை காலதாமதமின்றி மேற்கொள்ள‍ வேண்டும்.

பிரிவு – 10 

மனித உரிமைகளை அடிப்படைச் சுதந்திரங்களின் மீறல்களில் எவரும் ஈடுபடக்கூடாது. தேவையின் போது செயல்பட்ட‍தற்காகவோ அல்ல‍து செயல்படத் தவறியதற்காகவோ அல்ல‍து மறுத்த‍தற்காகவோ எவ்வகையான தண்டணைக்கும் கடுமையான நடவடிக்கைக்கும் எவரும் ஆளாக்க‍ப்பட கூடாது. 

பிரிவு – 11 

தனியாகவோ கூட்டாகவோ அவரவர் வேலையை அல்ல‍து தொழிலைச் சட்ட‍ப்பூர்வமாகச் செய்ய ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு ஒருவரது தொழில் காரணமாக மானுட மாண்பு மனித உரிமைகள் அடிப்படைச் சுதந்திரங்களையும் ஆகியவற்றிற்குப் பாதுகாப்பு ஏற்பட்டால் அவர் அந்த உரிமைகளையும் சுதந்திரங்களையும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ள‍ப்பட்ட‍ தொழில், மற்றும் ஒழுக்க‍ தரங்களுக்கு ஏற்ப மதித்து நடக்க‍ வேண்டும். 

பிரிவு – 12

அ) மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களின் மீறல்களுக்கெதிராக அமைதியான நடவடிக்கைகளில் தனியாகவோ கூட்டாகவோ பங்கேற்க ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 

ஆ) இப்பிரகடனத்தில் உள்ள‍ உரிமைகளைச் சட்டப்பூர்வமாய் பாதுகாக்க‍ முயல்வோர் சந்திக்கும் வன்முறைகள் , அச்சுறுத்த‍ல் , பழிவாங்குதல், பாகுபாடு காட்ட‍ல், நெருகடி கொடுத்த‍ல், கடுமையான நடவடிக்களைகள் ஆகியவற்றிலிருந்து தனியாகவோ சட்ட‍ ரீதியாகவோ அரசு பாதுகாப்பு அளிக்க‍வும், அதிகாரிகள்ல மூலம் உத்த‍ரவாதமளிக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள‍ வேண்டும். 

தனிநபர் அல்ல‍து ஒரு கூட்ட‍த்தின் தூண்டுதல்களால் மனித உரிமைகள் அடிப்படைச் சுதந்திரங்கள் மீறப்படுகின்ற போதும் மனதிக் காப்பாளர்கள் ஒவ்வொருவரையும் தனியாகவோ கூட்டாகவோ தேசிய சட்ட‍த்தின் கீழ் பாதுகாப்ப‍து அரசின் கடமையாகும். 

பிரிவு –13 

இப்பிரகடனத்தின் பிரிவு 3 இன் படி மனதி உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் வளர்த்தெடுத்துப் பாதுகாக்கும் நோக்கில் மூல ஆதாரங்களைத் தேடவும் பெறவும், தேடிய ஆதாரங்களை அனுபவிக்க‍ தனியாகவோ கூட்டாகவோ ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 

பிரிவு 14

1) சட்ட‍ம், நீதி நிர்வாக நடவடிக்கை மூலம் தன் ஆளுகைக்குட்பட்ட‍ மக்க‍ளிடம் அரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டு குடியுரிமையியல் உரிமைகளை வளர்த்தெடுக்க‍வும் பொறுப்பு அரசுக்கு உள்ள‍து. 

2) இந்நடைமுறைகள் கீழ்க்க‍ண்டவற்றை உள்ள‍டக்கும். 

அ) சர்வதேச மனித உரிமை முறையாவணங்கள் தேசிய சட்ட‍ங்கள் ஒழுங்கமைப்புக்கள் ஆகியவற்றை  பிரசுரித்த‍ல் அனைவர்க்கும் பரவலாக கிடைக்க‍ச் செய்தல். 

ஆ) மனித உரிமைகள் பற்றிய சர்வதேச ஆவணங்களை முழுமையாக மக்க‍ளுக்கு கிடைக்கும் வாய்ப்பினை உருவாக்க‍ல் சர்வதேச உடன் படிக்கைகளின் படி உருவாக்க‍ப்பட்ட‍ அமைப்புக்களுக்கு அனுப்ப‍ப்படும் அரசின் அவ்வ‍ப்போதைய அறிக்கைகள், விவாத சுருக்க‍ம், இவ்வமைப்புகளின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் அனைத்தும் மக்க‍ளுக்கு கிடைத்திட வகை செய்ய‍ப்பட வேண்டும். 

3) மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகியவற்றை மென்மேலும் வளர்த்தெடுத்துப் பாதுகாக்க, தேவை ஏற்படுகின்ற போதெல்லாம் சுதந்திரமான தேசிய அமைப்புக்களையும் மனித உரிமை ஆணையங்களையும் அல்ல‍து வேறு வடிவிலான தேசிய அமைப்புக்களையும் தன் ஆளுகைக்குட்பட்ட‍ப் பொருத்த‍மான இடங்களில் புதிதாக உருவாக்கிட, அரசு ஆவன செய்ய‍ வேண்டும். 

பிரிவு – 15 

மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்கையும் வளர்த்தெடுக்கும் வகையில் கல்வியின் எல்லா மாவட்ட‍ங்களிலும் மற்றும் பயிற்சிக்கு பொறுப்பாயுள்ள‍ வழக்குரைஞர்கள் சட்ட‍ அமலாக்க‍ அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கும் மனித உரிமை பற்றிய அடிப்படைக் கருத்துக்களைப் போதிக்க‍ வேண்டிய பொறுப்பு உண்டு. 

பிரிவு 16

தனி நபர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் மனித உரிமை தொடர்பான நிறுவனங்கள் மூலம் மக்க‍ள் மத்தியில் மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள் பற்றிய அனைத்து தகவல்களை அறியச் செய்தல் இத்துடன் தேசங்களுக்கிடையே இனங்களுக்கிடையே மதங்களுக்கிடையே நட்புறவு, சகிப்புத் தன்மை சமாதானம், ஆகியவற்றை சமூக மற்றும் சமுதாயப் பின்புலத்தைக் கவனத்தில் கொண்டு இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள‍ வேண்டும். 

பிரிவு 17

இப்பிரகடனத்திலுள்ள‍ உரிமைகளையும் சுதந்திரங்களையும் நடைமுறைப்படுத்தும்போது தனியாகவோ அல்ல‍து கூட்டாகவோ செயல்படும் ஒவ்வொருவரும், சர்வ தேச மனித உரிமை ஆவணங்கள் மற்றும் சட்ட‍ரீதியான பிறரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் மதித்து, ஜனநாயக சமூகத்தின் ஒழுக்க முறையை பொது ஒழுங்கு அமைதி ஆகியவற்றிக்கு பங்கம் வராமல் தேவைகளைப் பூர்த்தி செயும் சில வரையறைகளுக்கு உட்பட்டிருக்க‍ வேண்டும். 

பிரிவு 18 

  1. சமுதாயத்திற்காகவும், சமுதாயத்தினுள்ளும் ஒவ்வொருவருக்குமுள்ள‍ கடமைகள் மூலம் மட்டுமே அவரவர் தனித்தன்மை சுதந்திரமாக முழு வளர்ச்சி அடைய முடியும்.
  1. சனநயாகத்தைப் பாதுகாத்த‍ல், மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்களை வளர்த்தெடுத்த‍ல், ஜனநாயக சமூக, நிறுவன செயல்பாங்கின் மேம்பாட்டினை வளர்த்தெடுத்த‍லுக்கான அர்ப்ப‍ணிப்பு போன்ற பணிகளில் தனிநபர்கள், குழுக்க‍ள் அரசு சாரா அமைப்புக்கள் பொறுப்புடன் பங்களிக்க வேண்டும்.
  1. அகில உலக மனித உரிமை பிரகடனத்திலும் ஏனைய சர்வதேச ஆணையங்களிலும் கூறப்பட்டுள்ள‍படி இணக்க‍ம் நிறைந்த சமூகத்தையும் ஒழுங்கு நிறை உலகத்தையும் உருவாக்கும் பொறுப்பு அனைவர்க்கும் உண்டு.

பிரிவு 19

இப்பிரகடனத்திலுள்ள‍ எந்த கருத்தும் தனி நபரால் குழுவால், சமூக அமைப்பால் அல்ல‍து அரசால் பிரகடனத்திலுள்ள‍ உரிமைகளையும் சுதந்திரங்களையும் அழிக்கும் நோக்கில் செயல்படவோ அல்ல‍து செயல்படுத்த‍வோ உரிமை இருப்ப‍தாக அர்த்த‍ம் கொள்ள‍க்கூடாது. 

பிரிவு 20 

ஐ.நா சாசன விதிகளுக்கு எதிராகத் தனி நபர்கள் குழுக்க‍ள் நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புக்கள் ஆகியவற்றின் செயல்பாட்டை அரசு ஆதரித்து ஊக்குவிப்ப‍தாக அர்த்த‍ம் கொள்ள‍க்கூடாது