WHR Declaration

உலக மனித உரிமைகள் பிரகடனம்
முக்கியக் கூறுகள்
உலக மனிதக் குடும்பத்தின் உறுப்பினர் அனைவரது மறுக்கப்பட முடியாத மாண்பு, சமத்துவம் ஆகியவற்றிலும் தகர்க்க‍க் கூடாத அவர்களது உரிமைகளிலும்தான் உலக சுதந்திரம், நீதி, உலக அமைதி ஆகியவற்றின் அடித்தளமே அமைந்துள்ள‍து.
மனித உரிமைகளை மறுப்ப‍து, ஒதுக்குவது எனும் மனித மனச்சாட்சியைத் துன்புறுத்தும் காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைகள் மறைந்து மனிதர்களுக்குப் பேச்சுரிமை, அச்ச‍மற்ற இயல்பு வாழ்க்கை, வாழ்க்கைத் தேவைகள் முழுமையாக நிறைவேறிய நிலைகள் ஆகியவற்றை எய்திடவே சாதாரண மனிதர்களின் விழைவுகள் பிறந்துள்ள‍ன•
சட்ட‍த்தின் ஆட்சி எனும் பாங்கில் மனித உரிமைகள் பாதுகாக்க‍ப்படா விட்டால் வேறு வழியின்றி கபடைசி ஆயுதமாகப் புரட்சி மேற்கொள்ள‍வே மனிதன் தள்ள‍ப்படுகிறான் என்பதை அறிந்து
1. நாடுகளிடையே நல்லுறவு வளர்க்க‍ப்பட
2. மனிதர்க்ளின் அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்க‍ப்பட
3. ஆண் பெண் சமத்துவம் நிகழ‌
4. சமூக முன்னேற்ற‍ம் விளைய
5. வாழ்க்கைத் தரம் மேம்பட
உறுப்பினர் நாடுகள் ஐ.நா.வுடன் இணைந்து உழைத்திட உறுதி பூண்டு
1. மனித உரிமைகள் காக்க‍ப்பட
2. அடிப்படைச் சுதந்திரம் போற்ற‍ப்பட
உலகெங்கும் பொதுவான கருத்தொகை நிகழவும் (ஐ.நா.வின்) பொதுச் சபை பிரகடனப்படுத்துவாவது.
மக்க‍ள் அனைவரும் எய்திட வேண்டிய பொது நிலையை இப்பிரகடனம் விழைவதை மனதிலேற்று, உறுப்பினர் நாடுகள் தத்தமது பகுதிகளில் மட்டுமல்ல‍ உலகம் இப்போது நிலை உருவாக உழைக்க வேண்டும் (என இப்பிரகடனம் வலியுறுத்துகிறது.)
பிரிவு 1
உலகிற் பிறந்துள்ள‍ மனிதர்கள் அனைவரும் பிறப்பிலேயே சுதந்திரமானவர்கள், தமக்குள்ள‍ உரிமைகள், மாண்புகளில் அனைவரும் சமமே. பகுத்துணரும் அறிவும் மனச்சாட்சியும், கொண்டு மாந்தர் அனைவரும் உடன்பிறப்புணர்வுடன் வாழும் மேற்கொள்ள வேண்டும்
பிரிவு 2
மனிதர்களிடையே, இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் சார்பு, நாடு, சமூகப் பிரிவு, சொத்து மதிப்பு, பிறப்பு ஆகிய பிற எந்தக் காரணத்தின் அடிப்படையிலும் வேறுபாடுகள் காட்ட‍ப்படாமல் உரிமையிலும் சுதந்திரத்திலும் சம உரிமைக்கான அருகதையுடையவர்கள். நாடுகளிடையே எவ்வகையான வேறுபாடுகளும் காட்ட‍ப்படக் கூடாது.
பிரிவு 3
ஒவ்வொருவருக்கும் வாழ்வுரிமை, சுதந்திரம், தனிமனிதப் பாதுகாப்பு என்பது அடிப்படையான உரிமைகளாகும்.
பிரிவு 4
மனிதர் யாரும் யாரையும் அடிமை கொள்ள‍க் கூடாது. யாரையும் பினையில் வைத்திருக்க‍க் கூடாது. அடிமை வர்த்தகம் என்பது அறவே ஒழிக்க‍ப்படுவதாகும்.
பிரிவு 5
மனிதர் யாரும் யாரையும் மனிதாபிமானமற்ற முறையில் மனித மாண்பைக் குறைக்கும் வகையில் கொடுமைப்படுத்த‍வும், தண்டனைக்குட்படுத்த‍வும் கூடாது.
பிரிவு 6
சட்ட‍ப்படி, தானொரு நபர் என்பது அனைவருக்கும் எங்கும் அங்கீகரிக்க‍ப்படுதல் வேண்டும்.
பிரிவு 7
சட்ட‍த்தின் முன் அனைவரும் சமம். அனைவரும் சட்ட‍ப்படி சமமான பாதுகாப்புக்குரிமையுடைவர், எவ்வகையான பாகுபாடும் காட்ட‍ப்படாமல், சமமாக நடத்த‍ப்பட மனிதருக்கு உரிமையுண்டு.
பிரிவு 8
அடிப்படை உரிமைகள் சட்ட‍ப்படி அளிக்க‍ப்படவும், அவை மீறப்படும் நிகழ்வுகளில் தகுதிவாய்ந்த நீதி அமைப்புக்களின் மூலம் தீர்வுகள் பெறும் உரிமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு.
பிரிவு 9
எதேச்சதிகாரமாக எவரையும் கைது செய்தல், அடைத்து வைத்த‍ல், நாடு கடத்த‍ல் கூடாது
பிரிவு 10
தன்மீதும் பெறும் எவ்வகையான கிரிமினல் குற்ற‍ச் சாட்டினையும் சட்ட‍ப்பூர்வமாக எதிர்கொள்ள நியாயமான சுந்திரமான ஒரு சார்பற்ற‍ நீதியமைப்பு மூலம் வெளிப்படையான விசாரணை பெற ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
 
பிரிவு 11
குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍வர் எவருமே குற்ற‍ம் நிரூபிக்க‍ப்படும் வரையில், தீதறியாதவர் (இன்னோசென்ட்) ஆக‌வே கருதப்படுதல் வேண்டும். தனது தரப்பினை முன் வைத்துத் தீர்ப்புப் பெற உரிய வாய்ப்புகள் குற்ற‍ம் சாட்ட‍ப்பட்ட‍வருக்கு அளிக்கப்பட வேண்டும்.
ஒரு செயல் செய்ய‍ப்படும் போது சட்ட‍ப்படி குற்ற‍மல்ல‍ என்றிருந்து, பின்ன‍ர் அத்தகு செயல் சட்ட‍ப்படியான குற்ற‍ம் எனப் பகுக்க‍ப்பட்டாலும் அவ்வாறான பகுப்புக்கு முன் செய்த செயலுக்காகக் குற்ற‍த் தண்டனை யாருக்கும் அளிக்க‍ப்படக் கூடாது.
பிரிவு 12
தனியொருவரின் தனிமை, குடும்பம் வீடு தகவல் பரிமாற்ற‍ம் ஆகிய வற்றில் ஏதேச்சதிகாரமாக குறுக்கிடுவதோ, அவரது தன் மதிப்பிற்கும் பெருமைக்கும் காயம் விளைவிப்பதோ தகாது. அவ்வாறான குறுக்கீடுகள் தாக்குதல்களுக்கு எதிராகச் சட்ட‍ப்படி உரிய பாதுகாப்பு பெறும் உரிமை அனைவர்க்கும் உண்டு.
பிரிவு 13
ஒவ்வொரு நாட்டுக் குடிமக்க‍ளுக்கும் தமது நாடுகளில் எப்பகுதிக்கும் செல்ல, வீடமைத்துக் கொள்ள உரிமையுண்டு. எந்நாட்டையும் (எந்தாடுட்பட) விட்டக யாருக்கும் உரிமை உண்டு. தன் நாட்டிற்கு மீளவும் உரிமை உண்டு.
பிரிவு 14
பிற நாடுகளில் புகலிடம் தேடிக் கொள்ள உரிமை உண்டு. வழக்க‍மான நீதி நடவடிகைகளுக்கு அஞ்சியோ, ஐ.நா.வின் கொள்கைகளுக்கு எதிராகவோ இவ்வாறான புகலிடம் தேட யாரும் உரிமை கொண்டாடக் கூடாது
பிரிவு 15
தன் நாட்டில் தேசிய இனப் பங்காளனாரும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
ஒருவர் தன் தேசிய இனத்தைத் துறக்குமாறு, ஏதேச்சதிகாரமான எந்த நடவடிக்கையும் செய்யப்படலாகாது. வேறு நாட்டுக் குடியுரிமை பெறுவதையும் யாருக்கும் தடுக்க‍ கூடாது.
பிரிவு 16
மண வயதடைந்த ஆண் – பெண் எவரும் இனம், நாடு, மதம், எனும் வேறுபாடுகளெதனின் குறுக்கீடும் இன்றித் தமக்குள் இசைவுடன் திருமணம் புரிந்து கொள்ள, குடும்பம் அமைக்க‍ உரிமையுடையவர் திருமணத்திலும் திருமண முறிவு தேர்வுகளிலும் ஆண் பெண் இருவரின் பொறுப்பும் கடப்பாடுகளும் சமமானவை.
திருமணங்கள் மணமக்களது முழு இசையுடன் நிகழ்வதாலயே இருக்க வேண்டும்.
குடும்பம் என்பது சமுதாயத்தின் இயற்கையான அடிப்படை அலகு என்பது அங்கீகரிக்க‍ப்பட்டுச் சமுதாயமும் அரசும் அதற்குத் தக்க காப்பளிக்கும் கடமை கொண்டவையாகும்.
பிரிவு 17
தனித்தோ, கூட்டாகவோ சொத்துரிமை பெற அனைவருக்கும் உரியவர், எவருடைய உடைமையும் சொத்தும் ஏதேச்சதிகாரமாக பறிக்க‍ப்பட்ட‍து தக்க‍தல்ல‍.
பிரிவு 18
சிந்தனையுரிமை, கருத்துரிமை, மதவுரிமை அனைவர்க்கும் உண்டு. விரும்பி மதம் மாற்ற‍ம் ஏற்றுக் கொள்ள‍வும், யாருக்கும் உரிமையுண்டு. மதவழிபாடு பின் பற்றி பொழுகுதல், முதலியவற்றை மேற்கொள்ளும் உரிமையும் அனைவருக்கும் உண்டு.
பிரிவு 19
குறுக்கீடு செய்ய இயலாக் கருத்துரிமை எல்லைகள் கடந்தும் தகவல் தொடர்பு வழிகளில் தனது கருத்துக்களை வெளிப்படுத்த‍ உரிமை மனிதர் அனைவர்க்கும் உண்டு.
பிரிவு 20
எவருக்கும் எங்கும் அமைதியாக கூட சங்கம் அமைக்க உரிமை உண்டு.
யாரையும் எவ்வமைப்புகளிலும் சங்கத்திலும் கட்டாயப்படுத்தி உறுப்பினர்கள் ஆக்குதல் ஆகாது.
 
பிரிவு 21
த‌னது நாட்டின் அரசமைப்பில் நேரடியாகவும், சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுக்க‍ப்பட்ட‍ பிரதிநிதிகள் வாயிலாகவும் பங்கேற்க மக்க‍ளுக்கு உரிமை உண்டு.
நாட்டின் பொதுப் பணிகளில் சம வாய்ப்பில் பங்கேற்கவும் அனைவர்க்கும் உரிமை உண்டு.
மக்க‍ள் விருப்ப‍த்தின் அடிப்படையில் தான் அரசு, நிர்வாகம், அதிகாரம் குறைய வேண்டும். குறிப்பிட்ட வரையறுக்க‍ப்ப‍ட்ட‍ கால அளவில் நியாயமான முறையில் நடைபெறும் தேர்தல்களின் மூலம் மக்க‍ள் விருப்ப‍ம், தேர்வு வெளிப்படுவதாக அமைய வேண்டும்.
பிரிவு 22
ஒவ்வொருவரும் தமது நாட்டின் மொத்த‍ச் செயல்பாடுகள், பன்னாட்டுக் கூட்டுறவுகள் மூலம் சமுதாய, பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் வளர்ச்சியும் விளக்க‍மும் பெறவும், சமுதாயக் காப்பு கிடைக்க‍வும், தனது மாண்புக்கும் தனித்துவப் பாதுகாப்புக்கும் உரிமை பெறவும்ம் அருகதையுடையவர் ஆவர்.
பிரிவு 23
வேலை செய்ய‍ அனைவர்கும் உரிமை, விரும்பிய வேலை வாய்ப்பினைத் தேர்ந்து கொள்ள உரிமை, நியாயமான, வேலை செய்ய‍ச் சாதகமான சூழல் பெற உரிமை, வேலையில்லா நிலையில் பாதுகாப்பு பெறும் உரிமை செய்யும் வேலைக்கேற்ப, பாகுபாடுகள் இல்லாமல் சம வேலைக்குச் சம ஊதியம் பெற உரிமை, மனித மாண்பு குறையா நிலையில் உழைப்பவரும் அவரது குடும்பத்தாரும் வாழ்வூதியம் பெற உரிமை தொழிற்சங்கங்கள் அமைக்க அதன் மூலம் உழைப்போர் நலன்கள் காக்க‍ப் பெற அனைவருகும் உரமையுண்டு.
பிரிவு 24
ஓய்வு, பொழுதுபோக்கு வரையறுக்க‍ப்பட்ட‍ வேலை நேரம் குறிப்பிட்ட‍ விடுமுறைக் காலங்கள் (ஊதியத்துடன்) பெறும் உரிமை உழைப்போர் அனைவருக்கும் உண்டு.
பிரிவு 25
சுகாதாரம், நலவாழ்வு பெற ஒவ்வொருவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உரிமை உண்டு. உணவு, உடை, உறைவிடம் மருத்துவ வசதி, தேவையான சமூக சேவைகள் கிடைக்க‍ப் பெற வேலையின்மை, நோய் இயலாமை முதுமை, வாழவழியற்ற பிற நிலைகள் நிலவும்போது தக்க உதவிகள் பெறும் உரிமை
குழந்தைகள், பேறுகால மகளிர் முழுக் கவனிப்பு பெற பிறந்த குழந்தைகள் யாவருக்கும் சமச் சீரான சமுதாய பாதுகாப்பு வழங்கப்பட உரிமையுண்டு.
பிரிவு 26
யாவர்க்கும் கல்வி பெற உரிமையுண்டு, ஆரம்ப நிலையிலாவது கல்வி இலவசமாக வேண்டும். ஆரம்ப கல்வி கட்டாயமானதாக வேண்டும். தொழிற்கல்வி, உயர்க்கல்வி வாய்ப்புகள் சமமாக அனைவராலும் எட்ட‍ப்படுவதாக அமைய வேண்டும்.
மனிதனை முழுமையாக்குவதாக கல்வி அமைய வேண்டும். மனித உரிமைப் பண்பு வளர்ப்பதுதான் கருத்தொருமை, பொறையுடைமை, சகிப்புத் தன்மை, நட்புணர்வு வளர்ப்பதான கல்வி அளிக்க‍ப்பட வேண்டும். தமது குழந்தைகளுக்கு அளிக்க‍ப்பட வேண்டிய கல்வி வகை குறித்து முடிவு செய்ய‍ப் பெற்றோருக்கு உரிமையுண்டு.
பிரிவு 27
த‌னது சமுயாத்தின் பண்பாட்டுக் களங்களில் பங்கேற்க, அனுபவிக்க அறிவியல், தொழில் நுட்ப முன்னேற்றங்களின் விளை பயனைத் தடையின்றி நுகர ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. தமது கண்டுபிடிப்புகளுக்கான உரிமை – பெருமை கண்டுபிடித்த‍வர்களுக்கு உறுதி செய்ய‍ப்படுவதாகும்.
பிரிவு 28
இப்பிரகடனத்தின் விழைவுகளான உரிமைகள், சுதந்திரம் ஆகியவை முழுமையாய் நிலவும் சமுதயாத உலக அமைப்பு உருவாக செய்ய‍ அனைவர்க்கும் கடப்பாடுண்டு.
பிரிவு 29
த‌னது சமுதாயத்திற்கான கடமைகளை ஒவ்வொருவரும் முழுமையாக செய்வதன் வழியே தனது தனித்துவம் வளரும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து செயல் படுதல் வேண்டும்.
மற்றோர் உரிமையையும் நலனையும் பாதுகாக்கும் பொது நோக்கில் தமது உரிமைகள் நலன்கள் மீது எழும் சில கட்டுப்பாடுகளையும் ஏற்று அனைவரும் செயல்படு வேண்டும்.
இச்சாசனத்தில் சொல்லப்பட்ட‍ உரிமைகள் எதனையும் ஐ.நா. அமைப்பின் நோக்க‍ங்களுக்கு எதிராகப் பயன்படுத்த‍க் கூடாது.
பிரிவு 30
இச்சாசனத்தில் சொல்ல‍ப்பட்டுள்ள‍ எதுவும் எவருடைய உரிமை, சுதந்திரம் ஆகிய எதனையும் சிதைப்பதற்கான செயல்களுக்குப் பயன்படுத்த‍வே கூடாது.