What are Human Rights ?

மனித  உரிமைகள் என்றால் என்ன? 
ஒரு தனி மனிதனுடைய அல்ல‍து ஒரு சமுதாயத்தினுடைய உணவு, உடை, இருப்பிடம், சுயமரியாதை – காவல்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்ட‍த்துறை, அரசியல்வாதிகள், ரௌவுடிகள் மூலமாக உரிமைகள் மறுக்கப்படும்போது அல்ல‍து மீறப்படும்போது இவற்றிலிருந்து பாதுகாப்பதே மனித உரிமை ஆகும்.
மனித உரிமைகள் ஏன் தேவைப்படுகிறது? 
முதலாம் உலகப் போர் முடிந்த பின்பு அப்போரில் தோல்வியுற்ற நாடுகள், கண்டிப்பாக நாங்கள் இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெறுவோம் என்று சொன்னார்கள். அதேபோல் இரண்டாம் உலகப் போரில் தோற்ற‍வர்களும் கூறினார்கள். ஆனால் மூன்றாம் உலகப் போரில் தோற்ற‍வர்கள் நான்காம் உலகப்போரில் நிச்ச‍யம் வெற்றி பெறுவோம் என்று சொல்ல முடியாது. உலக நாடுகளில் அதிகமான நாடுகள் அணு ஆயுதத்தை வைத்துள்ள‍ன• மூன்றாம் உலகப்போர் நடைபெறும் என்றால் உலகில் புல் பூண்டு, மிருகம், மனிதன் என்ற எதுவுமே இருக்க‍ வாய்ப்பில்லை. எல்லாம் அழிந்து விடும். ஆகவே தனிப்பட்ட‍ ஒருவனுடைய உரிமைகள் மறுக்க‍ப்படும் போது அது குடும்பச் சண்டையாக உருவெடுத்து, தனது இனச் சண்டையாகத் தொடங்கி, தனது மாவட்ட‍, மாநில, நாடு சண்டையாக்குவர். பிறகு தேசச்சண்டை உருவெடுத்து உலகப் போருக்கு வழிவகை செய்யும் என்பதால் ஒவ்வொரு தனி மனிதனின் உரிமையும், சட்ட‍த்தின் மூலம், அரசு பாதுகாக்க‍ வேண்டிய கட்டாயம் தற்சமயம்  ஏற்பட்டுள்ள‍து. ஆகவே மனிதன் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவ்வுரிமைகளை பாதுகாப்பது அரசின் தலையாக கடமையாக உள்ள‍து. ஆகவே ஐ.நா. சபையில் மனித உரிமை ஆணையம் தொடங்கப்பட்டு உலகளாவிய நாடுகளில் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மனித உரிமை மீறுகின்ற நாடுகளில் தலையிட்டு கண்டிக்க‍வும், தண்டிக்க‍வும், செய்துள்ள‍தால், உறுப்பு நாடுகள் மனித உரிமைகள் பேணுவதை தலையாயக் கடமையாக கொண்டுள்ள‍ன• இன்றைய சூழலில் மிகப்பெரிய சாதனை ஆகும்.
காலம்காலமாக இந்தியாவில் சாதீய முறை, மொழி, இனப்பாகுபாடு, பெண்மை, குழந்தை தொழில், மதம் ஆகிய தளங்களில் அதிகளவு மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமை நிறுவனங்கள் மூலம், மனித உரிமை மீறல்கள் கண்காணிக்க‍ப்ட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதால், கடந்த காலங்களைவிட தற்சமயம் மனித உரிமை மீறல்களின் அளவு ஓரளவு குறைந்து காணப்பட்டாலும் 130 கோடி மக்களுள்ள தேசத்திற்கு இன்ன‍மும் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு மனித உரிமைகள் பாதுகாப்பு போன்ற வழிகளில் செயல்பட மனித உரிமைகள் தன் ஆர்வலர்கள் தேவை அதிகரித்துள்ள‍தை உணர்ந்து நமது அமைப்பு தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்கி மனித உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க‍ப் பாடுபட்டு வருகிறது.
மனித உரிமைகள் வரலாறு (அமரிக்கா – நீக்ரோ) 
19ஆம் நூற்றாண்டு ஆரம்பக்கட்ட‍ங்களில் அமெரிக்காவில் அடிமை வர்த்த‍கம் சிறப்புற்றிருந்தது. அக்காலக்கட்ட‍ங்களில் ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து நீக்ரோக்களை சிறைபிடித்து கடத்தி  கப்பல்களில் அமெரிக்காவிற்கு கொண்டு வந்து அடிமைகளாக விற்பனை செய்து வந்தது மிகப்பெரிய தொழிலாக இருந்து வந்தது. பிற்காலத்தில் அடிமைகளில் நோயில்லாமல் நல்ல உடல்கட்டுடன் உள்ள‍ ஆண், பெண் இரண்டு அடிமைகளை ஒன்று சேர விட்டு பிறக்கின்ற குழந்தைகளை, தனியாக பிரித்து, இவ்வாறு பல குழந்தைகளை ஒன்று சேர்த்து வளர்த்து 15 வயதானவுடன் ஏலம்போட்டு அடிமைகளை  விற்பனை செய்கின்ற பண்ணை தொழில்கள் ஏராளமாக, தொடங்கிய காலம். இவ்வடிமைகள் உணவு, ஓய்வு மறுக்க‍ப்பட்ட‍து. நோய்வாய்ப்பட்ட‍வுடன் சுட்டுக் கொல்ல பட்ட‍னர். மிருகங்களைவிட மிக மோசமாக, கேவலமாக நடத்த‍ப்பட்ட‍னர். இக்காலக்கட்ட‍த்தில் தான் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அவர்களின் துணைவியார் திருமதி ஏலியட் ரூஸ்வெட் அவர்கள் சிந்தனையில் உதித்தது. அமெரிக்கர்களும், இங்கு அடிமையாக உள்ள‍ நீக்ரோக்களும் மனிதர்களே, அவர்களுக்கு உரிமைகள் மறுக்க‍ப்டுவது எந்த வித்தத்திலும் நியாயமற்ற‍ செயல் ஆகவே இது அனைத்து மக்க‍ளுக்கும் உரிமைகள் சமமாக வழங்கப்படவேண்டும் என்ற எண்ண‍மே, உலகளாவிய மனித உரிமைக்கு வித்திட்ட‍ செயலாகும். அதற்கு முன்பு இவர்களின் தலைமையில் ஒரு குழு 30 பிரகடங்கை தயாரித்து, ஐ.நா. சபையின் மூலம் டிசம்பர் 10, 1948-ல் வெளியிட்ட‍து. இதுவே இன்றும் மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏன் இந்தியாவிற்கு மனித உரிமைகள் அமைப்புகள் தேவை ? 
மன்னர்களின் ஆட்சி காலத்தில் அந்த பகுதியை ஆளும் அரசன் தன் எல்லைக்குட்பட்ட‍ இடங்களில் உள்ள‍ நிலங்களில் தனக்கு பிடித்தமானதை எடுத்துக் கொள்ள‍ முடியும். அதேபோல் எந்த பெண்ணையும் தனது அரண்மனைக்கு அழைக்க‍ முடியும். எவரையும் கொலை செய்ய‍முடியும், ஏன் என்று கேள்வியே கேட்க முடியாத நிலை இருந்து வந்தது. அதற்கு பின்பு மொகலாயர்கள், வெள்ளையர்கள், நம் நாட்டை ஆண்ட காலக்கட்ட‍ங்களிலும் இதே நிலையே தொடர்ந்தது வந்தது. அதேபோல் இன்று ஜனநாயக நாட்டிலும், மக்க‍ளின் வக்குகள் மூலம் வெற்றியடையும் அரசியல்வாதிகள் தாங்கள் நினைத்ததை தங்களின் அதிகாரம் மூலம் எதையும் செயல்டுத்தத் தயங்காத நிலை உள்ள‍தால், (லஞ்சம், ஊழல்) மீண்டும் ஒரு சுதந்திரம் அடைய வேண்டிய நிலை உள்ள‍து. ஆகவே மனித உரிமை அமைப்புகளின் அவசியம் அதிகரித்துள்ள‍து. அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் தங்களின் கடமைகளை சரியாகச் செய்யும் பட்சத்தில் இவ்வகை அமைப்புகள் தேவைப்படாது. அப்படிப்பட்ட‍ சூழலை உண்டாக்கவும், மக்க‍ளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த‍வும், மக்களிடையே பெரிய மாற்ற‍ங்களை கொண்டுவர அவர்களை பயிற்றுவிக்க‍வும் இவ்வமைப்பானது த‌ம்மால் முடிந்த நன்மைகளை… நமது தேசத்திற்கு இவ்வியக்கதிதன் மூலம் செய்யவும், செயல்படுத்த‍வும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.
மனித உரிமைகளின் வகைகள் (Classification of Rights) 
மனித உரிமைகள் என்பது மனிதர்களுக்கே உரித்தான மனிதர்கள் அனுபவிக்கக்கூடிய நியாயமான சலுகைகளாகும். மனித உரிமையின்றி மனிதர்கள் மனிதர்களாக வாழ முடியாது. மேலும் இந்த உரிமைகளை மனிதர்களிடமிருந்து பிரிக்கவும் இயலாது. இந்த உரிமைகளும் அடிப்படை சுதந்திரமுமே மனிதர்களின் குணங்களையும் அறிவுக் கூர்மையையும் திறமைகளையும் மனச்சாட்சியையும் வளர்த்து அவர்களின் பல்வேறு வகைப்பட்ட‍ தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. மனிதர்களின் தன்மானம், உயர்வு ஆகியவைகளை அவர்கள் பயன்படுத்துகின்ற உரிமைகளை வைத்தே மதிப்பீடு செய்ய முடியும்.
மனித உரிமைகளை அரசியல் அறிஞர்கள் அறநெறி உரிமைகள் என்றும் சட்ட‍ உரிமைகள் என்றும் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். அறநெறி உரிமைகள் சட்ட‍த்தால் அங்கீகரிக்க‍ப்படாததாகும். சட்ட உரிமைகள் வாழ்வியல் உரிமைகள் அரசியல் உரிமைகள், பொருளாதார உரிமைகள் என்று பாகுபாடு செய்ய‍ப்படுகின்றன• இவைகள் அடிப்படை உரிமைகளாக சட்ட‍த்தால் மதிக்கப்பட்டு காக்க‍ப்படுகின்றன•
உரிமைகள் வகைகள் 
1. அறநெறி உரிமைகள் (Moral Rights)
சமுதாயத்தாலும், சமயங்களாலும் எடுத்துச் சுட்டிக் காட்ட‍ப்பட்ட அறநெறிகளின் அடிப்படையில் பின்பற்ற‍ப்படும் உரிமைகள் அறநெறி உரிமைகள் எனப்படுகிறது. இவை சமுதாயத்தினால் அங்கீகரிக்க‍ப்பட்ட‍வையாகும். இந்த உரிமைகளுக்குச் சட்ட‍ப் பின்னணி கிடையாது. சட்ட‍த்தால் காக்க‍ப்படுபவையும் அல்ல• எந்த நீதிமன்றத்தாலும் இவ்வுரிமைகளைக் கட்டுப்படுத்த‍வும் இயலாது.
குழந்தைகளின் உரிமை பாதுகாக்க‍ப்பட வேண்டும் என்பதை எல்லா சமுதாயமும் ஏற்றுக் கொள்கிறது. அவர்களுக்கு கல்வி அறிவைக் கொடுக்க‍ ஏற்றுக் கொள்கிறது. அவர்களுக்கு கல்வி அறிவைக் கொடுக்க‍ வேண்டும் என்று எல்லா பெற்றோர்களும் விரும்புகின்றனர். ஒரு வேளை பெற்றோர்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லையென்றால் அவர்களை எந்த நீதிமன்றமும் தண்டிக்க முடியாது.)
2. சட்ட உரிமைகள் (Legal Rights) 
சட்ட உரிமைகள் சட்ட‍ங்களின் வாயிலாக உறுதிசெய்ய‍ப்பட்டு நீதிமன்றங்கள் மூலம் காக்க‍ப்படுகின்றன• சட்ட‍ உரிமைகள் பாரபட்சமில்லாமல் சாதி, மத, இன, நிற வேறுபாடில்லாமல் எல்லோருக்கும் பொருந்தும் வகையில் செயல்படுத்த‍ப்படுகிறது. அதேநேரம் இந்த உரிமைகளை இறுக்கிப் பிடிக்க‍வும், தளர்த்திக் கொள்ளவும், அரசுக்கு அதிகாரம் உண்டு. சட்ட‍ உரிமைகளை மீறியவர்கள் சட்ட‍த்தால் தண்டிக்கப்படுவார்கள்.
உதாரணமாக 1956ல் இயற்றப்பட்ட‍ சொத்துரிமைச் சட்ட‍ம் தந்தையின் சொத்திலிருந்து பெண்ணுக்கு கட்டாயமாகப் பங்கு உண்டு என்பதை வலியுறுத்துகிறது. இந்தச் சட்ட‍த்தினால் இந்தியாவில் பல பெண்கள் பயனடைந்துள்ள‍னர். ஆனால் இந்தச் சட்ட‍ம் மீறப்படும்போது பாதிக்க‍ப்பட்ட‍ பெண் நீதிமன்றத்திற்குச்சென்று நீதியைப் பெறலாம்.
சட்ட‍ உரிமைகள் மூன்றாகப் பிரிக்க‍ப்படுகின்றன• அவை 1. வாழ்வியல் உரிமைகள், 2 . அரசியல் உரிமைகள், 3 பொருளாதார உரிமைகள் ஆகும். வாழ்வியல் உரிமைகள் இருப்ப‍தால் ஒரு மனிதன் சமுதாயத்தின் அரசின் பாதுகாப்புடன் வாழ முடியும். அரசியல் உரிமைகள் மக்க‍ளாட்சியின் அடித்தளமாக விளங்குகின்றன•
1) வாழ்வியல் உரிமைகள் (Civil Rights) 
ஒரு மனிதன் நாகரிகமான வாழ்க்கை வாழ வேண்டுமானால் அவனுக்கு அடிப்படையாக தேவைப்படுவது பாதுகாப்புடன் வாழ்க்கையை அனுபவித்தல் மற்றும் சொத்துரிமை, மிகவும் அவசியமானதாகும். ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. அப்ப‍டி தலையிடுவதைத் தடுக்கும் உரிமை அரசாங்கத்திற்கும் உண்டு. பாதுகாப்புடன் உரிமைகளை அனுபவிக்கும் அடிப்படையில் தான் மக்க‍ளின் தரமும், அரசாங்கத்தின் தரமும் மதிப்பிடப்படுகிறது. கீழ்க்க‍ண்ட வாழ்வியல் உரிமைகள் பற்றி விரிவாக காணலாம்.
2) வாழ்வதற்கான உரிமை (Right to Live)
பாதுகாப்புடன் வாழ்வதற்கான உரிமை அரசியலமைப்புகளில் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்க‍ப்பட்டுள்ள‍ன• இந்த உரிமை ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைக்குப் பாதுகாப்புப் பெற வழி செய்கிறது. ஒரு மக்க‍ளாட்சி நாட்டில் குடிமகனின் உயிரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும். இன்றைய நாளில் வாழ்க்கை என்பது தற்காத்துக் கொள்ளும் உரிமையாகும். ஒருவனுடைய உயிருக்கு மற்றொருவனால் ஆபத்து ஏற்படுமேயானால் அதைப் பாதுகாத்துக் கொள்ள அவனுக்கு உரிமை உண்டு.
மேலும் மனிதர்களிடம் உடல் ஊனம் தவிர்க்க‍ முடியாத நிலையில் அவர்களின் பாதுகாப்பிற்காகவும், மேம்பாட்டிற்காகவும்,தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. கண்கள் தெரியாதவர்களுக்கு வேலைவாய்ப்பில் சலுகைகள் வழங்கப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் கொலைக்குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் அரசுக்கே உண்டு. தனிப்பட்ட‍ நலன்களுக்கு அந்த அதிகாரம் அளிக்க‍ப்படவில்லை. மரண தண்டனை விதிப்பது சரியல்ல்ல‍ என்று பலர் தற்காலத்தில் கருத்து தெரிவித்துள்ள‍னர். ஏனென்றால் மனித உயிர்கள் புனிதமானவையாகும். மேலும் சமுதாயத்தின் அங்கமான குடிமகன் தற்கொலையும் செய்து கொள்ள‍க் கூடாது.
சமுதாயத்தின் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த‍ முயலும்போது தடையின்றி நடமாடும் உரிமையும் வேண்டும். இந்த உரிமை அரசாங்கத்தால் தடை செய்ய‍ப்படுதல் கூடாது. சுதந்திரமாக வாழ வேண்டும் என்பது அடிப்படை உரிமையாகும். இது நியாயமானது ஆகும். சுதந்திரம் என்பது விலை மதிக்க முடியாத சொத்தாக 18ஆம் நூற்றாண்டில் கருதப்பட்ட‍து. 1776ல் தோன்றிய அமெரிக்க சுதந்திரப்  போர் சுதந்திரத்திற்காக  தோன்றிய புரட்சி என்று எல்லோராலும் ஒப்புக் கொள்ள‍ப்பட்டுள்ள‍து. மேலும் பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி இந்திய விடுதலைப் போராட்ட‍ம் ஆகியவைகளுக்குக் காரணம் சுதந்திரமே ஆகும்.
தற்கொலை அரசாங்கமும் தற்கொலையைக் கண்டிக்கின்றன• எந்த நபரும் தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்ள உரமை இல்லை என்பது வலியுறுத்த‍ப்பட்டுள்ள‍து.
2) சுதந்திரமாக வாழும் உரிமை (Right to Liberty)
சுதந்திரம் என்பது ஒரு மனிதன் பிறப்பு உரிமையாகும். சுதந்திரம் இல்லையென்றால் வாழ்வே பொருளற்றதாகப் போய்விடும். இந்த சுதந்திர உரிமை மக்க‍ளிடையே நட்புறவை வளர்க்கிறது. சுதந்திர எண்ணத்தை தூண்டுகிறது. சுதந்திரமில்லாமல் ஒரு மனிதன் தன் ஆளுமையை வளர்த்துக் கொள்ள இயலாது. தனி மனிதன் சமுதாயத்தின் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த முயலும்போது தடையின்றி நடமாடும் உரிமையும் வேண்டும். இந்த உரிமை அரசாங்கத்தால் தடை செய்ய‍ப்படுதல் கூடாது. சுதந்திரமாக வாழ வேண்டும் என்பது அடிப்படை உரிமையாகும். இது நியாயமானது ஆகும். சுதந்திரம் என்பது விலை மதிக்க முடியாத சொத்தாக 18ஆம் நூற்றாண்டில் கருதப்பட்ட‍து. 1776ல் தோன்றிய அமெரிக்க சுதந்திரப் போர் சுதந்திரத்திற்காக தோன்றிய புரட்சி என்று எல்லோராலும் ஒப்புக் கொள்ள‍ப்பட்டுள்ள‍து. மேலும் பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி இந்திய விடுதலைப் போராட்டம் ஆகியவைகளுக்குக் காரணம் சுதந்திரமே ஆகும்.
3) வேலை செய்யும் உரிமை (Right to Work) 
ஒருவன் வாழ உரிமை உள்ள‍துபோல் அவனுக்கு வேலை செய்ய‍வும் உரிமை உள்ள‍து. உடல் வலிமை உள்ள‍வர்களுக்கு மற்றும் கல்வித் தகுதி பெற்ற‍வர்களுக்கு வேலை கொடுப்ப‍து அரசின் கடமையாகும். ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் உழைத்து ஊதியம் பெற்று அதன் மூலமே நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். வேலை செய்வது ஒருவனுடைய உரிமை என்றால் வேலைக்கேற்ற ஊதியம் பெறுவதும் அவனது உரிமைதான். ஒருவன் தான் சம்பாதிக்கும் பணத்தில் திருப்தியாக வாழ வேண்டும். பல நாடுகளின் உழைப்பவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் கூட வழங்கப்பட வில்லை. ரஷ்யாவில் மட்டும்தான் வேலை செய்யும் உரிமை அடிப்படை உரிமையாகச் சேர்க்க‍ப்பட்டுள்ள‍து. இந்தியாவில் தனது விருப்பப்படி ஒரு தனி மனிதனும் எந்தத் தொழிலை வேண்டுமானாலும் செய்ய‍லாம்.
வேலை கொடுக்கும் கடமையை பெரும்பாலான அரசுகள் சட்ட‍ ரீதியாக நிறைவேற்ற முடியவில்லை. இதனால் பெரும்பாலான நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்ட‍ம் நிலவுகிறது. பலவீனம் அடைந்தவர்கள் வயது முதிர்ந்தவர்கள் வறுமையில் வாடுகின்றனர். தற்கால அரசுகள் மக்க‍ள் நலன்  நாடும் அரசுகளாக உள்ள‍ நிலையில் வேலையற்ற‍வர்களுக்கு நிவாரணத் தொகை, வயதானவர்களுக்கு உபகாரத் தொகை நோயுற்ற‍வர்களுக்கு நிவாரணம் முதலியவைகளை செய்து தருகின்றனர்.
4) கல்வி உரிமை  (Right to Education) 
ஒருவன் தனக்கு வேண்டிய கல்வியைப் பெறவும் அதற்கான வசதிகளைப் பெற்றுக் கொள்ளவும், உரிமை உண்டு. இதுவே கல்வி உரிமையாகும். உயிர்வாழ ஒருவனுக்கு உணவு, தண்ணீர் எவ்வ‍ளவு அவசியமோ அதற்குச் சமமாகவ கல்வியும் தேவைப்படுகிறது. மேலும் மக்க‍ள் இறைமைத் தன்மை பெற்ற‍வர்கள். ஆதலால் கல்வி அவர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. கல்வியறிவு இருந்தால் தான் வேலை செய்யும் திறமையை உருவாக்க முடியும். அரசியலைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ள‍ முடியும். தேர்தலில் சரியாக மதிப்பீடு செய்து வாக்களிக்க முடியும் இப்ப‍டிப்பட்ட‍ கல்வியை நம்மால் ஒதுக்க‍ முடியாது.
முன்னேறிவிட்ட நாடுகள் கல்விக்கு அளவுகடந்த முக்கியத்துவம் அளிக்கின்றன• அங்கு, கட்டாயக் கல்வித் திட்ட‍ம் உள்ள‍து. இந்தியாவில் 81ஆவது அரசியலமைப்புத் திருத்த‍த்தின் படி ஆறு முதல் பதினான்கு வயதுக்கு உட்பட்ட‍ குழந்தைகளுக்குக் கட்டாய இலவசகல்வித் திட்ட‍ம் செயல்படுத்த‍ப்பட்டுள்ள‍து.
5) சொத்துரிமை உரிமை (Right to Property)
ஒவ்வொரு மனிதருக்கும் சொத்து வைத்துக் கொள்வதில் ஆர்வம் உண்டு. செல்வம் சேர்க்க வேண்டும் என்ற உள்ளுணர்வு மனிதனின் சொத்துப் பற்றை வெளிப்படுத்துகிறது. அரசு, நாகரீகம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சியில் தனியார் சொத்து நிறுவனம் முக்கியப் பங்கு வகித்துள்ள‍து. மேலும் அரசு தோன்றுவதற்கு முன்பே தனியார் சொத்து தோன்றி விட்டது. என்பதும் குறிப்பிடத்தக்க‍து ஆகும். அரசு தோன்றுவதற்கு சொத்துரிமையே முக்கியமான காரணமாக விளங்கியது. ஆரம்பத்தில் மனிதர்களிடம் சமத்துவம் இருந்தது. தனியார் சொத்து இருந்ததில்லை. காலப்போக்கில் என்னுடையது உன்னுடையது என்ற எண்ண‍ம் தோன்றி தனியார் சொத்துக்கு அங்கீகாரமும் கிடைத்தது. சொத்துரிமை தைரியத்தையும், திருப்தியையும் கொடுக்கிறது. கடுமையாக உழைப்ப‍தற்கு ஊக்க‍த்தையும் அளிக்கிறது. சொத்துரிமை தான் சமுதாயம் மேம்பாடு அடைய முக்கியக் காரணம் ஆகும்.
சொத்துரிமையைப் பயன்படுத்தி   தனியார் சிலர் சொத்துக்களைக் குவித்து மற்ற‍வர்களைச்சுரண்ட ஆரம்பித்தார்கள். இதனால் சமுதாய ஏற்ற‍த் தாழ்வுகளும் முரண்பாடுகளும் ஏற்பட்ட‍து. எனவே தனியார் சொத்துக்களை முறைப்படுத்துவதற்கு பல நாடுகளில் சட்ட‍ங்கள் இயற்றப்பட்ட‍ன• இந்தியாவில் சமதர்ம சோசலிச சமுதாயத்தை ஏற்படுத்துவதற்காக ஜமீன்தாரி  முறையும் நிலச்சுவான்தார் முறையும் ஒழிக்க‍ப்பட்ட‍து. இந்தியாவில் சொத்துரிமை முதலில் அடிப்படை உரிமையாக இருந்தது.  ஆனால் 42ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் படி சொத்துரிமை சாதாரண சட்ட‍ உரிமையாகவே உள்ள‍து.
6) ஒப்ப‍ந்த உரிமை (Right to Contract) 
நாகரீக வாழ்க்கையில் ஒப்ப‍ந்த உரிமை மிகவும் முக்கியமானதாகும். இந்த உரிமை இல்லையென்றால் சமூக வாழ்க்கையினால் பயனில்லாமல் போய்விடும். ஒப்ப‍ந்த உரிமையின்படி ஒருவர் மற்ற‍வர்களோடு சுதந்திரமாக ஒப்ப‍ந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. நிலக்கிழார் குடியானவர்களுக்குக்கிடையே ஏற்படும் ஒப்ப‍ந்தங்களை அரசாங்கம் அங்கீகரிக்கிறது. மேலும் கடன் கொடுத்த‍வர், கடன் வாங்கியவருக்கிடையே ஏற்படும் ஒப்ப‍ந்தத்தையும் அங்கீகரிக்கிறது. சமுதாயத்தின் நலன் கருதி அரசாங்கம் தீமை பயக்கக்கூடிய ஒப்ப‍ந்தங்களைத் தடுத்து அவற்றை முறைப்படுத்துகிறது. உதாரணமாக மனிதர்களை வெளிநாடுகளுக்குத் தவறான முறையில் அனுப்பும் ஒப்ப‍ந்தங்கள் குழந்தைத் தொழிலாளர்களை அமர்த்தும் ஒப்ப‍ந்தங்கள் போன்றவற்றை எந்த அரசாங்கமும் அங்கீகரிப்பதில்லை.
7) பேச்சுரிமையும், எழுத்துரிமையும் (Right to Speech and Press)
பேச்சுரிமையும் எழுத்துரிமையும் ஒரு மனிதருக்கு மிகவும் அவசியமானதாகும். பேச்சுரிமை சுதந்திரமான கருத்துப் பரிமாற்ற‍த்துக்குமிகவும் உதவியாக உள்ள‍து. சுதந்திரமாகப் பேசவும், சிந்திக்க‍வும் முடிகிறது. இந்த உரிமை இல்லையென்றால் சமூக வாழ்க்கை பொருளற்ற‍தாகப் போய்விடும். பல மக்க‍ளாட்சி நாடுகளில் பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ள‍து. பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமை மூலம் மக்க‍ள் தங்கள் விருப்ப‍ங்களையும் குறைகளையும் அரசாங்கத்திடம் சொல்ல முடிகிறது. தவறு  செய்யும் அரசைக் குறை கூறவும் முடிகிறது.
ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையும், எழுத்துரிமையும் மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் ஜனநாயகம் அவற்றின் அடிப்படையில் தான் வெற்றிகரமாக செயல்படுகிறது. இந்தியாவில் பேச்சுரிமையும் எழுத்துரிமையும் அடிப்படை உரிமைகளாகும். இதற்கு இந்திய அரசியல் சாசனம் குழு உத்திரவாதம் அளிக்கிறது. மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் சுதந்திரமான சிந்தனை, பேச்சு, எழுத்து ஆகியவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள‍து.
8) சங்கம் அமைக்க உரிமை (Right to Assembly and Association) 
சங்கம் அமைக்கும் உரிமையானது பேச்சுரிமையோடு ஒருங்கிணைந்த உரிமையாகும். ஒரு மக்க‍ளாட்சி நாட்டில் மக்க‍ள் தத்தமது கருத்துக்களை, வெளிப்படுத்த‍வும், பரப்ப‍வும் அமைப்புக்களை உருவாக்க‍வும் உரிமை வேண்டும். ஒவ்வொரு சமுதாயத்திலும் மக்க‍ளின் நடவடிக்கைகள் சங்கங்கள் மூலம் வெளிப்படுகின்றன• இதனால் பல அரசியல் சமுதாய, பொருளாதார, பண்பாட்டு, சாதி, சமய சங்கங்கள் பல தோன்றியுள்ள‍ன• இந்த சங்கங்கள் மற்றும் அமைப்புகள் இல்லையென்றால் மக்க‍ளின் வாழ்க்கை பாலைவனம் போல் காட்சியளிக்கும் அதனால் தான் மக்க‍ள் ஒன்றுகூடி வாழ்வதும் சங்கங்களை அமைப்பதும் சிறப்பான நல்ல அம்சங்கள் என்று தற்காலத்தில் கருதப்படுகிறது.
9) சமய உரிமை (Right to Religion) 
ச‌மய உரிமை பெரும் மதிப்புடைய உரிமையாகும். இந்த உரிமை ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பும் கடவுளை சுதந்திரமாக வழிபடுவதற்கு வகை செய்கிறது. எந்த மதத்தையும் பின்பற்றாமல் இருக்கும் உரிமையும் மனிதனுக்கு உண்டு. மதவெறி பிடித்த ஆட்சியாளர்கள் காலத்தில் மக்க‍ள் சமயச் சுதந்திரம் இல்லாமல் துன்பப்பட்டார்கள். உதாரணமாக ஔரங்கசீப்பின் மதவெறி காரணமாக இந்துக்கள் பெரும் துன்பம் அடைந்தனர். இந்துக்களுக்கு சுதந்திரமான மத‌ வழிபாட்டு உரிமை அப்போது வழங்கப்படவில்லை. அதே போல் ஐரோப்பாவில் ஐரோப்பிய மக்க‍ள் கடும் துன்பங்களை அனுபவித்தார்கள். தற்போது அநேகமாக எல்லா நாடுகளிலும் மக்க‍ள் தத்தமது விருப்ப‍ம் போல் சமயத்தைப் பின்பற்றும் உரிமையைப் பெற்றுள்ளார்கள். ஆனால் பாகிஸ்தான், ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் தாங்கள் விரும்பும் சமயத்தைப் பின்பற்ற‍ உரிமை இல்லை.
இந்தியா ஒரு சமயச் சார்பற்ற‍ நாடாகும். இங்கு அரசு எந்த சமயத்தையும் சார்ந்தது அல்ல‍. மக்களும் தங்கள் விருப்ப‍ப் படி எந்த சமயத்தையும் பின்பற்றும் உரிமை பெற்றுள்ளார்கள். இங்கு சமய உரிமை அடிப்படை உரிமையாக உள்ள‍து.
10) இல்ல‍ற வாழ்வு உரிமை (Right to Family)
தனி மனித குடும்பம் வைத்துக் கொள்ள‍ உரிமை உண்டு. அதாவது ஒவ்வொருவருக்கும் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்து ஒரு குடும்பமாக வாழ உரிமை உண்டு. இல்ல‍றமே நல்ல‍றம். வரலாற்றின் எல்லா கால கட்ட‍ங்களிலும் குடும்பம் என்ற சமுதாய நிறுவனம் பேணிக் காக்க‍ப்பட்டுள்ள‍து. அரசின் வளர்ச்சியிலும் பண்பாடு நாகரீக வளர்ச்சியிலும் குடும்பம் முக்கிய பங்கெடுத்துள்ள‍து. புனித தன்மை வாய்ந்த இந்த குடும்பம் என்ற நிறுவனம் அரசினால் சட்ட‍ப்பூர்வமாக பாதுகாக்க‍ப்படுகிறது. குடும்ப உறவுகளை ஒழுங்குபடுத்த‍ பல சட்ட‍ங்கள் இயற்ற‍ப்பட்டுள்ளது. திருமண வயதுச் சட்ட‍ம், பாலிய விவாக ஒழிப்புச் சட்டம், பலதார மண தடைச் சட்ட‍ம், குடும்ப உறுப்பினர்களின் சொத்துரிமைச் சட்ட‍ம், திருமணப் பதிவு ச் சட்ட‍ம், விவாகரத்து சட்ட‍ம், போன்ற சட்ட‍ங்கள் இயற்றப்பட்டு இல்ல‍ற வாழ்வு சிறக்க வழிவகை செய்ய‍ப்பட்டுள்ள‍து. இவ்வாறு குடும்பப் பிரச்சினைகளிலும் அரசாங்கம் தலையிட்டு குடும்ப வாழ்க்கை சீராக நடத்த‍ப்பட வழி செய்கிறது.
11) சமத்துவ உரிமை (Right to Equality)
சட்ட‍த்தின் முன் சமம் என்பதே சமத்துவ உரிமையாகும். இது விலை மதிக்க‍ முடியாத உரிமையாகும். அதாவது சாதி, மதம் இனம், பால் என்ற வேறுபாடுகள் இல்லாமல் சட்ட‍ம் என்ற கண்களின் முன்னிலையில் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்பதே யாகும். சமத்துவ உரிமை என்பது ஏழு அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். எல்லா ஜனநாயக நாடுகளில் உள்ள‍ அரசியலமைப்பு சாசனங்களில் சமத்துவ உரிமை இடம் பெற்றுள்ள‍து. சமத்துவ உரிமை உள்ள‍ நாட்டில் சட்ட‍ம் எல்லோருக்கும் சமமாகும். ஒரே ஒரு குறிப்பிட்ட‍ கூட்ட‍த்திற்குச் சாதகமாகவோ அல்ல‍து பாதகமாகவோ இருக்கக் கூடாது. சட்ட‍த்தை மீறுகிறவர்கள் யாராக இருந்தாலும் அரசு அவர்களுக்கு ஒரே மாதிரியான தண்டனையை வழங்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்து உரிமைகளும் வாழ்வியல் உரிமைகளாகும். 
3. அரசியல் உரிமைகள் (Political Rights) 
ஒவ்வொரு மனிதனும் நேர்முகமாகவோ அல்ல‍து முறைமுகமாகவோ தனது நாட்டில் அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறான். இவ்வாறு நாட்டின் அரசியல் விவகாரங்களில் ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்கிற உரிமையே அரசியல் உரிமையாகும். சுருக்க‍மாகக் கூறினால், ஆளப்படுபவர்களுக்கு ஆட்சியில் பங்கு கொள்ளும் உரிமையே அரசியல் உரிமையாகும்.  அரசியல் உரிமைகள் இந்த உரிமைகளுக்கு அடிப்படையாக விளங்குவதால் இவைகள் சட்ட‍த்தால் பாதுகாக்க‍ப்படுகின்றன• அரசியல் உரிமைகள் ஒரு நாட்டின் குடிமக்க‍ளுக்கு மட்டுமே அளிக்க‍ப்படுகின்றன‌• வெளிநாட்டினருக்கு அளிக்க‍ப்படுவதில்லை. அரசியல் உரிமைகளை கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்த‍லாம்.
1) வாக்க‍ளிக்கும் உரிமை (Right to be vote) 
அரசியல் உரிமைகளில் முக்கியமானது வாக்க‍ளிக்கும் உரிமையாகும். வாக்குரிமையின் மூலம் மக்க‍ள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிகிறது. இந்தப் பிரதிநிகள் சேர்ந்தே அரசாங்கத்தை அமைக்கிறார்கள். இவ்வாறு வாக்குரிமை உள்ள‍வர்களுக்கு மறைமுகமாக அரசாங்கத்தை நடத்திச் செல்லும் வாய்ப்பு உள்ள‍ன• வாக்களிப்பதற்கான வயது வரம்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. இந்தியாவில் 1950ஆம் வருட அரசியலமைப்புச் சட்ட‍ப்படி 20 வயது நிரம்பிய ஆண் பெண் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்க‍ப்பட்ட‍து ஆனால் 1989ஆம் வருட 61வது அரசியலமைப்புத் திருத்த‍த்தின் படி இந்த வயது வரம்பு 18 ஆக குறைக்கப்பட்ட‍து. சில நாடுகளில் பெண்கள், சொத்து இல்லாதவர்கள், கல்வியறிவு இல்லாதவர்களுக்கு வாக்குரிமை அளிக்க‍ப்படவில்லை. ஆனால் குடியாட்சி நாடுகளில் சாதி, சமயம், இனம், பால், சொத்து, தகுதி, கல்வியறிவு போன்றவைகளினால் வாக்குரிமை மறுக்க‍ப்படுவதில்லை.
2) தேர்தலில் போட்டியிடும் உரிமை (Right to be Elected) 
வாக்களிக்கும் உரிமைகளைப்போலவே தேர்தலில் போட்டியிட்டு வாக்குகள் பெரும் உரிமையும் உண்டு. சில நாடுகளில் வாக்களிக்கும் உரிமை உள்ள‍ எல்லோரும் தேர்தலில் போட்டியிட முடியாது. வாக்களிக்க குறைந்தபட்ச வயதும், தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச வயதும் தனித்தனியாக நிர்ணயம் செய்ய‍ப்பட்டிருப்ப‍தே ஆகும். உதாரணமாக இந்தியாவில் வாக்களிக்க 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிட 25 வயது நிரம்பியிருக்க‍ வேண்டும் என்றும் நிர்ணயம் செய்ய‍ப்ட்டுள்ள‍து. தற்போது தேர்தலில் விவரம், குற்ற‍ப்பின்ன‍ணி போன்றவைகளைத் தவறாமல் தெரிவிக்க வேண்டும். இந்த விபரங்கள் பத்திரிகைகளில் பிரசுரிக்க‍ப்பட்டு, மக்க‍ளுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. ஆனால் பொதுவாக தேர்தலில் போட்டியிடுபவர்கள் கல்வி அறிவு, அரசியல் அனுபவம் பெற்ற‍வர்களாகவும், நேர்மையான, தன்நலமற்ற‍ சிந்தனை கொண்டவர்களாகவும் இருக்க‍ வேண்டும் என்பதே எல்லோருடைய கருத்தாகவும் உள்ள‍து.
3) அரசு பணி வகிக்கும் உரிமை (Right to Public Office) 
மக்க‍ளாட்சி நாடுகளில் அரசாங்கத்தில் பதவி வகிக்கும் உரிமையும் ஒவ்வொருவருக்கும் கொடுக்க‍ப்பட்டுள்ள‍து. எந்த அரசாங்கப் பதவியையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அது எந்த ஒருவரின் உரிமையும் அல்ல• அரசுப் பணி என்பது இனம், சாதி, சமயம், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் வாய்ப்புக்கள் அளிக்க‍ப்பட வேண்டும். ஆனால் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்காக அரசுப்பணிகள் தாழ்த்த‍ப்பட்ட‍வர்களுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய‍ப்படுகின்றன• இந்தியாவில் சாதாரண குடும்பத்தில் பிறந்த அப்துல்கலாம் குடியரசு தலைவர் பதவி வகித்தது குறிப்பிடத்தக்க‍து ஆகும். இந்தியாவில் அரசு பணி வகிக்கும் உரிமை குடிமக்க‍ள் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ள‍து.
4) முறையீடு செய்யும் உரிமை (Right to Petition) 
முறையீடு செய்யும் உரிமையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. தனக்கு இழைக்க‍ப்பட்ட‍ குறைகளைத் தீர்ப்ப‍தற்காக அரசாங்கத்திற்கோ அல்ல‍து நீதிமன்றத்திலோ முறையீடு செய்யலாம். மக்க‍ளாட்சி நாடுகளில் வழங்கப்பட்டுள்ள‍ன இந்த முறையீடு செய்யும் உரிமை ஒரு சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் மக்க‍ளும் அரசு உயர் அதிகாரிகளும் நன்மை அடைகிறார்கள் இதன்மூலம் மக்க‍ளும் அரசு உயர் அதிகாரிகளும் நன்மை அடைகிறார்கள். மக்க‍ள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்கின்றனர். அதே சமயத்தில் அதிகாரத்தில் இருப்ப‍வர்கள் மக்க‍ளின் பிரதிபலிப்புக்களைப் புரிந்து கொள்கிறார்கள். மேலும் தங்களின் திட்ட‍ங்களும் கொள்கைகளும் மக்க‍ளைத் திருப்தி படுதுகின்றனவா என்பதையும் புரிந்து கொள்கிறார்கள். மக்க‍ளாட்சி நாடுகளில் மக்க‍ள் தான் இறைமை படைத்த‍வர்கள் எனவே அவர்களின் குறைகளை தீர்த்து வைப்ப‍தில் அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும்.
5) அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை (Right to Criticism the Government)  
அரசாங்கத்தின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் விமர்சிக்கும் உரிமையும் குடிமக்க‍ளுக்கு உள்ள‍து. இது மக்க‍ளாட்சி நாடுகளில் அடிப்படையான அரசியல் உரிமையாகும். இதன்மூலம் அமைதியான முறையில் கருத்துப் பரிமாற்ற‍ம் செய்ய‍ வாய்ப்பு உள்ள‍து. மேலும் மக்க‍ள் அரசாங்கத்தின் கவனத்தை தங்கள் பக்க‍ம் திருப்ப‍ முடிகிறது. கொள்கை மற்றும் ஆட்சித் துறையில் காணப்படும் குறைபாடுகளையும் அரசாங்கம் கவனித்து பொறுப்புடன் நடந்து கொள்ள வழி ஏற்படுகிறது. பொதுவாக மக்க‍ளாட்சி நாடுகளில் அரசாங்கம் மக்க‍ளுக்குப் பதில் சொல்லக் கடமைப்ப்ப‍ட்டுள்ள‍து. தனிப்பட்ட‍ அமைப்புகள், செய்தித்தாள்கள் போன்றவை அரசை குறைகூறும் போது அரசாங்கமே வீழ்ச்சியடையும் நிகழ்ச்சியை நாம் காண்கிறோம். எனவே அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் உரிமை மிக முக்கியமான உரிமைகளாகும்.
மேற்கண்டவை யாவும் முக்கியமான அரசியல் உரிமைகளாகும்.
4. பொருளாதார உரிமைகள் (Economic Rights)
வாழ்வியல் மற்றும் அரசியல் உரிமைகள் போல பொருளாதார உரிமைகளும் மிகவும் முக்கியம் ஆகும். வாழ்வியல் மற்றும் அரசியல் உரிமைகளின் விலை மதிப்பில்லாத பயனை அனுபவிக்க வேண்டுமென்றால் பொருளாதார உரிமைகளும் அவசியம் தேவை.  மனிதனுக்கு சுதந்திரமும் தேவை. அதே சமயம் உணவும் தேவை மனிதனின் சராசரி வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை இருப்பிடம் போன்றவற்றைப் பெறும் அளவுக்கு உற்பத்தித் திறம் கொண்டவர்களாக மனிதர்களை உயர்த்துவதே பொருளாதார உரிமைகளின் அடிப்படைக் கூறுகளாகும். பொருளாதார உரிமைகளின் பல்வேறு பிரிவுகளைக்காணலாம்.
அ) வேலை செய்யும் உரிமை (Right to Work) 
வேலை செய்யும் உரிமையே பொருளாதார உரிமைகளில் முதன்மையானதாகும்.  ஏனென்றால் பிறவகைப் பொருளாதார உரிமைகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பதே வேலை செய்யும் உரிமைதான். மேலும் மனித தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழி அமைத்துக் கொடுப்ப‍தே இந்த உரிமைதான். மனித உரிமைகள் பிரகடனம் பிரிவு 23(1) வேலை செய்யும் உரிமை பற்றிக் கூறுகிறது. ஒவ்வொருவரும் வேலை செய்யும் உரிமை, வேலையைத் தெளிவு செய்யும் உரிமை மற்றும் வேலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ள‍னர். என்று இந்தப் பிரிவு கூறுகிறது. அதே போல பன்னாட்டு ஒப்ப‍ந்தங்களின் ஆறாவது பிரிவு ஒப்ப‍ந்த நாடுகள் வேலை செய்யும் உரிமையை அந்த நாட்டு மக்க‍ளுக்குப் பெற்றுத் தர வேண்டும் என்று கூறுகிறது. வளர்ச்சியடைந்த பலநாடுகள் இந்த உரிமையை அங்கீகரித்துள்ள‍ன• இந்தியாவில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளின் 41வது பிரிவு வேலை செய்யும் உரிமையைப் பாதுகாப்பது அரசின் கடமை என்று குறிப்பிடுகிறது.
ஆனால் இன்று பல நாடுகளில் வேலையில்லாத திண்டாட்ட‍ம் அதிகமாக உள்ள‍து. அரசாங்கத்தினால் அனைவருக்கும் வேலை கொடுக்க‍ முடிய வில்லை. இந்தியாவில் பலகோடி பேர் வேலையில்லாமல் உள்ள‍னர். தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவில் தாராளமயமாக்க‍ல், கொள்கையால் லட்சக் கணக்கானோர் வேலை இழந்துள்ள‍னர். எனவே எல்லோருக்கும்  வேலை செய்யும் உரிமையை பெற்றுத் தருவது அரசின் கடமையாகும்.
ஆ) வேலைக்கேற்ற‍ ஊதியம் பெறும் உரிமம் (Right to Adequate wages)
வேலை கிடைத்தால் மட்டும்போதாது. வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்கும் உரிமையும் முக்கியமானது. தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடல்நலம், போன்றவற்றை நிறைவு செய்யும் அளவுக்கு ஊதியமும் கிடைக்க வேண்டும். மேலும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கும் ஊதியம் இருக்க வேண்டும். இந்தியாவில் தனியார் துறை நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றன• பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசாங்கம் அமைக்கும் ஊதியக் குழு ஊதியத்தை நிர்ணயம் செய்கிறது. தனியார் துறை ஊழியர்களுக்கு ஊதியத்தை நிர்ணயிப்பதிலும் அரசு முக்கிய பங்கு வகிக்கிறது.
நியாயமான ஊதியம் நிர்ணயிக்க‍ப்படுவதற்கு அரசின் தலையீடு தேவைப்படுகிறது. இதற்காக 1948ல் குறைந்தபட்ச ஊதியச் சட்ட‍த்தை இந்திய அரசு நிறைவேற்றியது. தொழிலாளர்களின் தேவை. வேலை கொடுப்போரின் திறன், ஒரே மாதிரி வேலைக்கு பிற இடங்களில் கொடுக்க‍ப்படும் ஊதியம், மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தேவைகள் ஆகிய நான்கு காரணிகள் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க‍ப்படுகிறது.. ஆனால் இந்தச் சட்ட‍த்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்க‍ல் ஏற்படுகிறது. மக்களின் அறிவின்மை, அதிகாரிகளின் பொறுப்பற்ற‍ தன்மை போன்றவற்றால் குறைந்தபட்ச ஊதியம் பல இடங்களில் வழங்கப்படுவதில்லை. மேலும் இந்திய அரசு 1976ல் சம ஊதிய சட்ட‍த்தை இயற்றியது. இன்றிமையாத தேவைகளை நிறைவேற்றப்போதிய ஊதியம் பெறும் உரிமை உள்ள‍தால் அதனை நிறைவேற்ற அரசு அவன செய்ய‍ வேண்டும்.
இ) நியாயமான வேலை நேரத்தைக்கோரும் உரிமை (Right to Fair Working Hours) 
எல்லாத் தொழிலாளர்களும் நியாயமான வேலை நேரத்தைக் கோரும் உரிமை பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குறிப்பிட்ட‍ வேலை நேரத்தை நிர்ணயிப்பதன் மூலம் தொழிலாளர்களும் வேலை கொடுப்ப‍வர்களும் பயனடைகின்றனர். தங்களின் உடல் நலத்தைப் பேண ஒவ்வொருவரும் ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம் ஆகிறது. தொழிலாளர்களை இயந்திரம் போல் நடத்த‍க் கூடாது நியாயமான வேலை நேரம் தொழிலாளர்களின் வேலைத் திறனை அதிகரித்து நிறுவனத்தின் லாபத்தைக் கூட்ட‍ உதவுகிறது. அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின் 24 ஆவது பிரிவு வேலை நேரத்தில் அளவு நிர்ணயிக்க‍ப்பட வேண்டும் என்றும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.
சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகள் குறித்த பன்னாட்டு ஒப்ப‍ந்தம் நியாயமான வேலைக்கேற்ற சூழ்நிலை உருவாக்க‍ப்படுவதுடன் போதிய ஓய்வும் குறிப்பிட்ட‍ வேலை நேரமும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்கப்பட வேண்டும் என்று என்று கூறுகிறது இந்திய அரசியலமைப்பில் காணப்படும் அரசு வழிகாட்டும் நெறிகளின் 39வது பிரிவு தொழிலாளர்களின் நல த்தையும் பலத்தையும் பாதுகாக்க‍ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. 43வது பிரிவு அதற்கு இன்னும் ஒரு படி மேலே சென்று நல்ல‍ வாழ்க்கையையும் அதற்குத் தேவையான ஊதியத்தையும் பெறும் அளவுக்கு தொழிலாளர் நிலை உயர வேண்டும் என்று கூறுகிறது. தற்போது பலநாடுகளில் எட்டு மணி நேர வேலை உறுதிப்படுத்த‍ப்பட்டு சட்ட‍ங்கள் இயற்றப்பட்டுள்ள‍ன•
ஈ) தொழிற்சாலைகளில் தன்னாட்சி உரிமை 
தொழிலாளர்களின் நலன்களைப் பேணுவதற்காக இந்த உரிமையும் வலியுறுத்த‍ப்படுகிறது. சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்திலும் பன்னாட்டு இயக்க ஒப்ப‍ந்தத்திலும் இந்த உரிமை குறிப்பிடப்பட்டுள்ள‍ன• தொழிலாளர்கள் தங்களது பொருளாதார மற்றும் சமூக  நலன்களை பாதுகாக்கும் பொருட்டு தொழிற்சங்கங்கள் தொடங்குவதற்கும் உறுப்பினர் ஆவதற்கும் உரிமை பெற்றுள்ள‍னர். என்று இந்த பிரகடனங்கள் குறிப்பிடுகின்றன• இந்திய அரசியல் அமைப்பின் அரசு வழிகாட்டும் நெறிகளின் 43வது பிரிவு நிறுவனங்களை நடத்துவதில் தொழிலாளர்களுக்குரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
1926ல் இயற்றப்பட்ட‍ தொழிற்சங்கச் சட்ட‍ம் பல திருத்த‍ங்கள் செய்ய‍ப்பட்டு இன்றும் நடைமுறையில் உள்ள‍து. தொழிற்சங்கங்கள் அமைக்கப்படுவதின் அவசியத்தையும் முறையையும் இது விளக்குகிறது. மேலும் தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையே உள்ள‍ உறவை மேம்படுத்த‍வும் சக தொழிலாளர்களிடையே இணக்கத்தைக் கொண்டு வரவும், தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதன் அவசியத்தையும் இச்ச‍ட்ட‍ம் விவரிக்கிறது. 1947 ம் வருட தொழிற்சாலை பிணக்குகள் சட்ட‍ம், தொழிற்சாலைகளில் ஏற்படும் பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளும் வழிவகைகைக் கூறுகிறது.
தொழிற்சாலை நிர்வாகத்தில் தொழிலாளர்கள், பங்கு பெற வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக பரிசீலிக்க‍ப்பட்டு வருகிறது. இதன்மூலம் தொழில் உற்பத்தியைப் பெருக்கி வரும் லாபத்தை தொழிலாளர்களுக்குப் பங்கீட்டு வழங்க முடியும் தொழிற்சாலை நிர்வாகத்தில் பங்கெடுத்துக் கொள்வதில் மூலம் தொழிலாளர்கள் பொருளாதார உரிமைகளை முழுக்க‍ முழுக்க‍ பெறுகிறார்கள். இதனால் உழைப்பில் அதிக ஊக்க‍ம் செலுத்த‍வும் முடியும்.
மேற்கண்டவாறு உரிமைகள் வகைப்படுத்தப்பட்டுள்ள‍ன. இத்தகைய உரிமைகள் பன்னாட்டளவில் பாதுகாக்க‍ப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்பின் 32வது உரிமைகளை அனுபவிப்பதற்கான பாதுகாப்பும் உத்திரவாதமும் பற்றிக் குறிப்பிடுகிறது.
உரிமைகள் பாதுகாக்க‍ப்படுதல் 
குடிமக்க‍ளின் உரிமைகள் கீழ்க்க‍ண்ட பல வழிகளில் பாதுகாக்க‍ப்படுகின்றன• 
அ) உரிமைகள் தற்காலத்தில் அரசியலமைப்பிலேயே சேர்த்து எழுதப்பட்டுள்ள‍ன• இந்த அரசியலமைப்புகள் உன்ன‍தமானதும், புனிதமானதுமாகக் கருதப்படுகிறது.
ஆ) அடுத்து, எல்லோருக்கும் தங்களுடைய உரிமைகளை நீதிமன்றங்கள் முன்பு எடுத்துச் சென்று அதன்மூலம் நிலை நாட்டிக் கொள்ள‍ உரிமை உண்டு. இதுவும் ஒரு அடிப்படை உரிமையாக அரசியலமைப்பில் சேர்க்க‍ப்பட்டுள்ள‍து.
மேலும் நீதிமன்றங்கள் அரசியலப்பின் பாதுகாவலனாகவும் செயலாற்றுகிறது. அதிகார பிரிவினைக் கோட்பாட்டின் மூலம் நீதிமன்றங்களுக்குச் சுதந்திரம் பிரிவினைக் கோட்பாட்டின் மூலம் நீதிமன்றங்களுக்குச் சுதந்திரம் அளிக்க‍ப்பட்டு உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள‍து. இந்த நீதிமன்றங்களின் மக்க‍ளின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காக பின்வரும் உத்த‍ரவுகளைப் பிறப்பிக்க‍லாம்.
காரணமில்லாமல் கைது செய்ய‍ப்பட்டு சிறையில் வைக்க‍ப்பட்டிருந்தால், நீதிமன்றங்களின் முன் நிறுத்துதல் உத்த‍ரவு மூலம், பரிகாரம் தேடிக் கொள்ள‍லாம். வழக்கு ஒன்றை விரைவாகவும் திறமையாகவும் முடித்து வைக்க, ஆணை கேட்பு நீதிப் பேராணை ஒன்றை நீதிமன்றம் வெளியிடலாம். இவை தவிர அதிகாரத்தை விளக்க வைத்த‍ல் உத்த‍ரவு, தடை நீதிப் பேராணை ஆணைகள் மூலமும் உரிமைகளை நீதிமன்றங்கள் பாதுகாக்கின்றன•
இ) இறுதியாக பொதுமக்க‍ளின் விழிப்பும், அவர்களது கருத்தும் உரிமைகளைக் காத்துக் கொள்ள முடியும். அரசாங்கம் உரிமைகளைப் பறிக்க முற்படும் போதும், எடுக்க‍  முற்படும்போது பொது மக்க‍ள் எதிர்ப்பு தெரிவித்து குறை கூறுதலின் மூலம் உரிமைகளைக் காத்துக் கொள்ள‍லாம். பொது மக்க‍ள் கருத்திற்கு முரண்பட்ட‍ எந்த அரசாங்கமும் பதவியில் நீடிக்க முடியாது.
இவ்வாறு பல வழிகளில் உரிமைகள் பாதுகாக்க‍ப்படுகிறது.
உரிமைகளும், கடமைகளும்
உரிமைகளைப் பற்றிக் கூறும் போது கடமைகளையும் காண வேண்டும் ஏனெனில் உரிமைகள் தனித்தியங்க முடியாது. உரிமைகளும் கடமைகளும் இணைந்தே இயங்குகின்றன என்று சால்மாண்ட் என்பவர் கூறுகிறார். உரிமைகளை அனுபவிக்கும் ஒருவர் மற்ற‍வர்களும், நாட்டிற்கும் பிரதிபலமாகச் செய்ய வேண்டியவைகளே கடமைகள் எனப்படும்.
க‌டமைகளில் பல வகைகள் உண்டு. அவை நீதியின் படியான‌ கடமைகள், சட்ட‍த்தின் படியான கடமை, உடன்பாட்டுக் கடமை, எதிர்மறைக் கடமை ஆகியவையாகும்.
தான தர்மங்கள் செய்ய வேண்டும், உண்மை பேச வேண்டும் போன்றவை நீதியின் பாற்பட்ட‍ கடமைகள் ஆகும். இவைகளைச் சட்ட‍ங்கள் வற்புறுத்துவது இல்லை. ஆனால் சட்ட‍த்தின் படியான கடமைகளைச் சட்ட‍ம் வற்புறுத்துகிறது. நீதிமன்றத்தில் சாட்சி கூறும் ஒருவர் உண்மையையே பேச வேண்டும் என்று சட்ட‍ம் கூறுகிறது. நீதிமன்றத்தில் பொய் சாட்சி கூறினால் அடுத்தவர‌து நலன் பாதிக்க‍ப்படுகிறது. எனவே உண்மையே பேசுவது நீதியின் பாற்பட்ட‍ கடமை என்றாலும் நீதிமன்றத்தில் உண்மை பேச வேண்டியது சட்ட‍த்தில் பாற்பட்ட‍ கடமையாகிறது.
உடன்பாட்டுக்கடமை என்பது போல வேண்டியதை வற்புறுத்துவதாகும். சாலையில் செல்பவர்கள் சாலை விதிகளைச் கடைப்பிடிக்க‍ வேண்டும். இது உடன்பாட்டுக் கடமை ஆகும். இதனை மீறுபவர்களுக்குத் தண்டனை கிடைக்கும். எதிர்மறைக்கடமை என்பது செய்ய‍க்கூடாது ஆகும். இது சட்ட‍த்தால் தவிர்க்க‍ப்படுகிறது. எனவே இதனைச் செய்பவர் தண்டிக்க‍ப்படுகிறார். அரசாங்க முத்திரையைத் தனி நபர் பயன்படுத்த‍க் கூடாது என்பது எதிர்மறைக் கடமையாகும்.
ஒரு சிறந்த குடிமகன் தனக்குத் தானே செய்ய வேண்டிய  கடமையும் உண்டு. தன்னை ஒரு சிறந்த குடிமகனாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.  தனது குடும்பத்தினருக்கும் தன்னைச் சார்ந்தோர்களுக்கும் உரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். சுகாதாரத்தைப் பேணி தன் சுற்றத்தாருக்கு கடமையாற்ற வேண்டும்.
ஒரு சிறந்த குடிமகன் தன் நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமைகளும் உண்டு. தன் நாட்டின் மீதும் அரசாங்கத்தின் மீதும் அரசியலமைப்பின் மீதும், சட்ட‍திட்ட‍ங்களின் மீதும் பற்றுடையவனாக இருக்க‍ வேண்டும். இவைகளைப் பேண வேண்டும் தேசியக் கொடி மற்றும் தேசிய சின்ன‍ங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அரசாங்கத்திற்கு உரிய வரிகளைச் செலுத்துவதைத் தன் கடமையாக்க‍ருதவேண்டும். பொது நல உண்ர்வோடு செயல்பட்டு தனது வாக்குரிமையை நல்வழியில் பயன்படுத்த‍ வேண்டும். பொதுப் பதவிகள் வகிப்பதில் நாணயமும், நேர்மையும் பின்பற்ற‍ப்பட வேண்டும். சட்ட‍த்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் பொது அலுவலர்களுக்கு உதவுதல் ஒரு குடிமகனின் கடமையாகும். மானிட சமுதாயத்தின் நன்மைக்கும், உலக அமைதிக்கும் ஒரு குடிமகன் கை கொடுக்க‍ வேண்டும், குரல் கொடுக்க‍ வேண்டும்.
உலக அரங்கில் ஐம்பதுக்கும் மேற்பட்ட‍ நாடுகள் தங்களுடைய அரசியலமைப்புகளில் அடிப்படை உரிமைகளும், கடமைகளும் இணைத்து கூறப்பட்டுள்ள‍ன• சில அரசியலமைப்புகளில் கடமைகள் தனிப்பகுதியாகச் சேர்க்க‍ப்பட்டுள்ள‍ன• இந்திய அலசியலமைப்பில், 4ஏ பகுதியில் இந்திய மக்க‍ளுக்கான அடிப்படைக் கடமைகள் 1976ல் 42வது அரசியலமைப்புத் திருத்த‍த்தின் படி சேர்க்க‍ப்பட்டுள்ள‍ன• இந்த கடமைகளை அரசியலபைப்பில் இடம் பெறச் செய்து வலியுறுத்துவதன் மூலம் மக்க‍ளுடைய போக்கையும் சிந்தனையையும் மாற்றி அமைதியான முறையில் சமூகப் புரட்சியைக் கொண்டு வர முயற்சி செய்ய‍ப்பட்டுள்ள‍து.
எனவே உரிமைகளை மட்டும் பேணாமல், நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் தன் கடமைகளை ஆற்றுவது நல்ல குடிமகனின் பண்பாகும்.
********************************