Structure

இயக்க கிளை அமைப்பு

  1. கிளை அமைப்பு நகரம் என்றால் வார்டுகளிலும், கிராமங்கள் என்றால் ஒவ்வொரு தனி கிராமத்திற்கும் ஒரு கிளை உருவாக்க வேண்டும். குறைந்த பட்சம் 10 உறுப்பினர்கள் 5 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதிகபட்சம் 25 உறுப்பினர்கள் இருக்கலாம். பெரிய வார்டு மற்றும் பெரிய கிராமங்கள் என்றால் தலைமையின் ஒப்புதல் கடிதத்தோட உறுப்பினர்களை தலைமை குறிப்பிடுகின்ற அளவிற்கு அதிகரிக்கலாம் ஒப்புதல் கடிதம் தலைமையிலிருந்து பெற்று அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும்.
  2. மூன்று மாததிற்கு ஒரு முறை மாதம் கடைசி திங்கள் மாலை 7 p.m. முதல் 7 p.m. வரை மாவட்ட பொறுப்பாளர்கள்  சேர்ந்து மாவட்ட தலைமை அலுவலகத்தில் கிளை கூட்டம் நடத்த வேண்டும். தொடர்ந்து 3 கூட்டங்களுக்கு கலந்து கொள்ளாத பொறுப்பாளர்களை  இவ்வியக்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள்.
  3. ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை, கிளையின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகளை, மாவட்ட தலைமைக்கு கிளை கழக செயலாளர்   அனுப்ப வேண்டும்.
  4. கிளை அலுவலகத்தில் கீழ்கண்ட கோப்புகள் ஆவணங்கள் பாராமரிக்கப்பட வேண்டும்.
  5. உறுப்பினர் படிவங்கள்
  6. உறுப்பினர் விவர பதிவேடு
  7. உறுப்பினர் வருகை பதிவேடு
  8. வரவு செலவு கணக்கு ஏடு
  9. நடவடிக்கை குறிப்பேடு
  10. தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில் நகல் கோப்பு
  11. கிளை அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பான ஆவணங்கள்.

(5)     ஒவ்வொருவரும் இவ்வியக்கத்தின்    மாதாந்திரப் பத்திரிக்கை “நீதி விசாரணை”யை வாங்கி பயன்படுத்தி, பிறருக்கும் அறிமுகப்படுத்தி, தனது உரிமைகளை அறிய வழிவகை  செய்யவேண்டும்.

(6)     நிதி தலைமையின் வங்கி கணக்கில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள  வேண்டும்.

விதி 11 ஒன்றிய அமைப்பு

  1. ஒவ்வொரு மாவட்டத்திலும், எத்தனை ஒன்றியங்கள் உள்ளனவோ அத்தனை ஒன்றியங்களுக்கும் ஒன்றிய பொறுப்பாளர்கள் 5 பேர் நியமிக்கப்பட வேண்டும்.
  2. ஒவ்வொரு ஒன்றியப் பொறுப்பாளர்களும் குழுவாக இணைந்து குறைந்தபட்சம் ஒரு ஒன்றியத்திற்கு 10 கிளைகளையும் அதிகபட்சமாக அனைத்து நகரங்களின் வார்டுகளிலும், கிராமங்களிலும் கிளை அமைக்க வேண்டும்.
  3. ஒன்றிய குழு மாவட்ட நிர்வாகத்திற்கும், கிளை நிர்வாகத்திற்கும் பாலமாகச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு கிளையின் செயலாளர், உறுப்பினர்களின் அனைத்து விபரங்கள் அடங்கிய பட்டியலை வைத்திருக்க வேண்டும்.
  4. மாவட்ட நிர்வாகிகளோடும், தலைமை அலுவலகத்திலும் நேரடி தொடர்பு வைத்திருக்க வேண்டும். மாவட்டத்தில் நடைபெறும் மாவட்ட கூட்டத்தில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கலந்து கொண்டதோடு, தங்களின் செயல் பாடுகளை அறிக்கையாக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட தலைமையிடமும், நிறுவனத் தலைமையிடமும் சமர்ப்பிக்க வேண்டும்.

விதி 12 இயக்க மாவட்ட அமைப்பு :

  1. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலைவர், செயலாளர், பொருளாளர், அமைப்புச் செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், துணைத் தலைவர், துணை செயலாளர் ஆகிய 7 பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்.
  2. ஒவ்வொரு பொறுப்பாளர்களும் குறைந்த பட்சம், ஒரு ஒன்றியத்தையும், அதன் கிளைகளையும், அதன் செயல்பாடுகளையும் கவனிக்க வேண்டும்.
  3. மாவட்ட பொறுப்பாளரில் தலைவர் அனைத்து உறுப்பினர் படிவங்கள், அதற்கான சந்தா தொகை போன்றவற்றை, தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி, உறுப்பினர் அடையாள அட்டையை தலைமையிடமிருந்து பெற்று உரியவர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும்.
  4. மாதம் ஒரு முறை மாத இறுதி செவ்வாய்கிழமை மாலை 6.00 முதல் 7.00 க்கு மாவட்ட கூட்டம் நடைபெற வேண்டும். இதில் விருப்பமுள்ள ஒன்றிய கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம்.
  5. மாவட்டங்களில் செயல்படுகின்ற கூட்டம் மற்றும் செயல்பாடுகளுக்கு தங்களால் இயன்ற பண உதவிகள் செய்வதோடு இந்நல்நோக்கிற்கு விருப்பட்டு பண உதவி செய்கிறவர்களை கண்டுபிடித்து அதன் பயனை மாவட்டம் மற்றும் தலைமை செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும்படி செய்ய வேண்டும். நிதிக்காக யாரையும் கட்டாயப்படுத்துதல் கூடாது.

விதி – 13 அகில உலக அளவில் இவ்வியக்கம் செயல்படும் விதம் பற்றிய விளக்கப்படம்

மத்திய நிர்வாகக் குழு

இண்டர்நேஷனல் கமிட்டி (கனடா)

ஆசிய கண்டம் கமிட்டி (சிங்கப்பூர்)

இந்திய நாடு கமிட்டி (டெல்லி)

கிழக்கு கமிட்டி மேற்கு கமிட்டி தெற்கு கமிட்டி வடக்கு கமிட்டி

(குஜராத்)           (கொல்கத்தா) (சென்னை) (டில்லி)

மாநிலக் கமிட்டி

மாவட்ட கமிட்டி

ஒன்றிய கமிட்டி

நகர, கிளை கமிட்டி

(இவ்வனைத்து கமிட்டியின் செயல்பாடுகளையும் மத்திய நிர்வாகக் குழு கண்கானித்து, ஆலோசனை வழங்கி, ஊக்கப்படுத்தி வரும்).

விதி : 14 பொறுப்புகள்

தலைவர் : பொது உறுப்பினர் கூட்டம், நிர்வாக குழு கூட்டம் ஆகியவைகளுக்குத் தலமை ஏற்று நடத்திக் கொடுத்தல் வேண்டும். செயலாளர், துணைச் செயயாளர், பொருளாளர் ஆகியோர் இல்லாத சமயங்களில் அவர்களது பொறுப்புகளையும் அந்த இடைக்காலத்தில் மட்டும் மேற்கொள்ளுதல் வேண்டும்.

செயலாளர் : அந்தந்த அமைப்புகளின் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் செயலாளர் மேற்கொள்ள வேண்டும்.

துணைச் செயலாளர் : செயலாளரால் தரப்படும் பொறுப்புகளை நிறைவேற்றுவதுடன் செயலாளர் இல்லாத சமயங்களில் துணைச் செயலாளர், செயலாளர் பொறுப்புகளை அந்த இடைக்காலத்தில் மட்டுமே மேற்கொள்ளுதல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர் தானாக விலகினாலோ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விலக்கப்பட்டாலோ அல்லது இயற்கை எய்தி விட்டாலோ அந்தப் பொறுப்புக்குப் பொறுப்பாளரை நியமிக்கும் அதிகாரம் நிர்வாக கமிட்டிக்கு உண்டு. ஆகவே அவ்வாறு நியமிக்கப்பட்டவர் நியமிக்கப்படும் பொறுப்புக்கேற்ப அந்த பொறுப்புக்குரியதகுதிகள் உரிமைகள் அனைத்தும் பெற்றவர் ஆவார்.

பொருளாளர் : நிறுவனத்தின் சார்பில் திரட்டப்படும் நிதியை வைத்துக் காப்பாற்றுதல், தலமை¬யும், மாவட்டமும் கோரும் செலவீனங்களுக்கு நிறுவனத்தின் இருப்பிலிருந்து தொகை கொடுத்தல், அவற்றின் வரவு – செலவு கணக்குகளை  நிர்வகித்து வருதல், கணக்கு விபரங்களை செயலாளர் மூலம் நிர்வாக குழுவிடம் ஒப்படைத்தல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும்.

ஒருங்கிணைப்பாளர் : கிளை அமைக்க கூட்டம் நடைபெறுவதற்கு தேவையான  இடம், பிற வசதிகள் செய்து கொடுக்க, மாவட்ட, மாநில பொறுப்பாளர்களுடன் உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தல் போன்ற நடவடிக்கையால் ஈடுபடுவார்.

மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) Public Relation Officer

இயக்க கூட்டத்தின் தீர்மானங்கள், முக்கிய நிகழ்வுகளை மாநில, மாவட்ட அலுவலக நிர்வாக Committee அனுமதியோடு ஊடங்கள் வாயிலாக மக்களிடம் செய்தி சென்றடைய வழி செய்வதோடு, ஊடங்கள் மூலமாகவும்,மக்கள் பிரச்சனைகளை நேரடியாகவும் கண்டுபிடித்து தலைமைக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தும் பணிகளை செய்ய  வேண்டும்.

விதி 15 : நிர்வாக கமிட்டியின் பணிகள்

முதலாவது நபர் :  மாவட்ட, மாநிலங்களின் கூட்டங்களை ஒழுங்கு செய்வார்.

இரண்டாவது நபர் : இக்கூட்டம் மற்றும் செயல்பாடுகளுக்கு திuஸீபீ ஸிணீவீsவீஸீரீ கவனிப்பார்

மூன்றாவது நபர் : மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைகளில் பொறுப்பாளர் உறுப்பினர்கள் சேர்க்கையை கவனிப்பார்.

நான்காவது : மாவட்டம், ஒன்றியத்தில் வருகின்ற நகர கிளை வருகின்ற மனுக்களை சேகரித்து, குறிப்பெடுத்து தலைமைக்கு தகவல் தெரிவிப்பார்.

ஐந்தாவது நபர் : தலைவர், சொல்லுகின்ற நபர்களை மனுக்களின் மீதான நடவடிக்கைக்கு பொறுப்பாளரை நியமித்து     முடியும்

ஆறவாவது நபர் : வரவு செலவு – மற்றும் மாதாந்திர, வருட கணக்குகளை பார்க்க வேண்டும்.

ஏழாவது நபர் : மேற்கண்ட 6 நபர்களின் செயல்பாடுகளைத் தலைவருக்கு தெரிவிப்பார்.