Mission

Mission

இலக்கு :

தியாகத்தோடு மனித உரிமைகளை பாதுகாத்து சேவை செய்வோம் (ஷிமீக்ஷீஸ்மீ – ஷிணீஸ்மீ – ஷிணீநீக்ஷீவீயீவீநீமீ) என்பதை இயக்கம் தன் மேல்வரியாகக் கொண்டுள்ளது. சமத்துவ சமுதாயத்தையும், சமூக நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க பாடுபடுவது ஆகும்.

விதி 5 : கொள்கை :

பிரிவு 1 :    சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், உண்மை, நீதி, அன்பு, சுயமதிப்பு, மனித மாண்பு, உரிமைகள், கூட்டுப் பொறுப்பு, கூட்டு செயற்பாடு ஆகிய சமுதாயத்தின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு சமூகத்திலுள்ள அனைவரின் உரிமைகளை நிலை நாட்ட பாடுபடுவது.

பிரிவு – 2: அரசமைப்பு, பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், நீதிதுறை, நிர்வாகம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய அனைத்து துறைகளிலும், சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு, உரிய பங்கு கிடைத்திடப் பாடுபடுவது.

பிரிவு – 3: சமூக மக்களிடையே அரசியல் விழிப்புணர்வையும், ஈடுபாட்டையும் ஏற்படுத்தி மதச் சார்பற்ற சக்திகளுடன் தோழமை  கொண்டு, அரசியல் செயல்பாடுகளை முன்னெடுப்பதால், சரியான அரசியல் திசையில் மக்களை வழிநடத்தி செல்வது.

பிரிவு – 4: மொழி, இனம், சமயம், கலாச்சாரம், அனைத்திலும் இந்தியாவின் பன்முகப்பட்ட தன்மையை அழித்து, ஒற்றைக் கலாசாரத்தைத் திணிக்க முயலும் வகுப்புவாத அரசியலுக்கு மாற்றாக, பன்முகத்தன்மையைப் பாதுகாத்து மத சார்பற்ற அரசியலை வளர்த்தெடுக்கவும், ஜனநாயகச் சக்திகளை வசப்படுத்தவும் பாடுபடுவது.

பிரிவு – 5:  மதச் சுதந்திரத்திற்கும், உரிமைகளுக்கும் வகுப்புவாத சக்திகளிடமும் எழுகின்ற அச்சுறுத்தல்களை எதிர்த்து இந்திய அரசியலைமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தையும், உரிமைகளையும், பாதுகாக்கவும், வளர்த்தெடுக்கவும் பாடுபடுவது.

பிரிவு 6:     அரசமைப்பில் சிறுபான்மையினரின் பங்கேற்பை உறுதி செய்வதின் வழியே, அரசின் கொள்கைகள், நலத்திட்டங்களில் சிறுபான்மையினர் நலன் காக்கப் பாடுபடுவது.

பிரிவு 7:     மண்ணின் கலாச்சாரம், பண்பாடு, மக்களின் தாய்மொழி ஆகியவற்றை பேணவும், வளர்த்தெடுக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது.

பிரிவு 8:      இந்திய சமூகத்தில் நிலவும் சாதியம், அதன் நச்சுக் கொடுக்கான தீண்டாமை, பெண்ணடிமைத் தனம், கல்வியறிவின்மை, குழந்தை உழைப்பு, போதை பழக்கம், லஞ்ச ஊழல் போன்ற சமூகக் கொடுமை களையும், கலாச்சார சீரழிவுகளையும் களைவதற்கு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும், போராட்டங் களை அகிம்சை வழியில் முன்னெடுப்பது.

பிரிவு 9:     சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், வன வளங்கள், உயிர் வளங்கள், கடல்வளங்கள், நீர் வளங்கள், வானம், காற்று இவற்றின் தூய்மை பேணவும், வளர்த்தெடுக்கவும் பாடுபடுவது.

பிரிவு 10:   உறுப்பினர்களின் அனைத்து அரசியல் செயற்பாடு களையும் இயக்க பாதையின் கீழ், அமைப்பு ரீதியாக மட்டுமே கொண்டு சென்று இயக்கத்தை வலுப் படுத்துவது.

பிரிவு 11:   அனைத்து இயக்க செயற்பாடுகளுக்கும், திட்டங் களுக்கும் தேவையான நிதியை மக்களிடமிருந்தே திரட்டி, எந்த நோக்கத்திற்காக நிதி பெறப்பட்டதோ, அதேநோக்கத்திற்காக அதை செலவிடுவதுடன், வரவு செலவு கணக்குகளை மக்களிடம் சமர்ப்பித்து, நிதி நடவடிக்கைகளை வெளிப்படையாக வைத்துக் கொள்வது.

பிரிவு 12:   பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், அரசு சார்ந்த கூட்டுறவு சங்க அமைப்புகள் மற்றும் பிற எந்த அமைப்புக்களின் தேர்தலிலும் இயக்கம் போட்டியிடாது.

பிரிவு 13 :  தேர்தலின் போது, தேவை ஏற்படின், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, எந்த அணியை ஆதரிக்கலாம் அல்லது ஆதரிக்கக் கூடாது என்பதை சூழ்நிலைகளுக்கு ஏற்ப இயக்கம் முடிவு செய்வதுடன் சனநாயகக் கடமை ஆற்றவும், பங்கேற்கவும், மக்களைப் பயிற்றுவித்துச் சரியான அரசியல் திசையில் வழிநடத்துவது.

பிரிவு 14 :  ஒரு தனி மனிதனுடைய சுயமரியாதையை மதித்து, மனிதர்களிடையே பரந்துபட்ட புரிதலையும், ஒருகிணைந்த செயல்பாடுகளையும், உருவாக்கு வதுடன், மனித உரிமை கோட்பாடுகளுக்கு எதிரான விமர்சனங்களைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான சமூக, அரசியல், செயற்பாடுகளில் உறுப்பினர்களை ஈடுபடத்தூண்டுவது, நேர்மையான செயற்பாடுகளை சமூக, அரசியல் வாழ்வில் வளர்த்தெடுக்கும் நோக்கில், இயக்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளிலும் சனநாயகத்தையும், வெளிப்படைத் தன்மையையும் ஊக்குவிப்பது.