Membership

உறுப்பினர் தகுதி

  1. இயக்கத்தில் உறுப்பினர்களாகச் சேர விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
  2. அகில உலக மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் (ழிநிளி) அமைப்பு விதிகள் மற்றும் செயல்பாடுகளை முழுமையாக ஏற்றுக் கொண்டவராக இருக்க வேண்டும்.
  3. 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  4. எந்த அமைப்பில் இருந்தாலும், தாமாக விரும்பி முன் வந்து இயக்கத்தில் இணைவோரே இயக்கத்தின் உறுப்னிராவர்.
  5. ஏனைய மனித உரிமை அமைப்புகளில் அவர்கள் உறுப்பினராக இருக்கக் கூடாது.
  6. ஒழுக்க நெறியிலும், கண்ணியமிக்க குடும்ப வாழ்க்கையிலும், வேரூன்றி வாழ்பவராய் அவர்கள் இருக்க வேண்டும்.
  7. அவர்கள் போதை பழக்கம் கொண்டவராய் இருக்கக் கூடாது.
  8. கந்து வட்டி தொழில்செய்பவராக, ஏழைகளின் உழைப்பை உறிஞ்சுபவராயும் இருக்கக் கூடாது.
  9. மனித உரிமை மதிப்பீடுகளுக்கும், மனித உரிமை அமைப்புகளுக்கும் எதிராக பேசுபவராகவும், செயல்படு கின்றவராகவும் இருக்கக் கூடாது.

விதி 8 : உறுப்பினர் சேர்க்கை

பிரிவு :1     இயக்கத்தில் உறுப்பினராகச் சேரும் போது ரூ.300/- (ரூபாய் மூன்று நூறு மட்டும்) உறுப்பினர் சந்தாவாகச் செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், உறுப்பினர் தகுதியைப் புதுபித்துக் கொள்ள சேர்ந்த நாளிலிருந்து 1 ஆண்டு கழித்து 1 வாரத்திற்குள் ரூபாய் 200/- (இரண்டு நூறு மட்டும்) உறுப்பினர் சந்தா செலுத்தி அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பிரிவு :2     உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களைப் பூர்த்தி செய்து, அதற்குரிய உறுப்பினர் சந்தாவுடன் மாவட்டத்திலுள்ள இதற்கு என நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் மூலமோ அல்லது தலைமை அலுவலகத்திற்கு நேரிடையாகவோ, தபால் மூலம் அனுப்பி பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி ஒரு வார காலத்திற்குள் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் கொடுக்கப்பட்ட தொகைக்கு ரசீது வழங்கப்படும்.   விண்ணப்படிவம் பரிசீலனைக்குப்பின் தலைமை அலுவலகத்தின் உறுப்பினர் பதிவேட்டில், அவர் பெயர் பதிவு செய்யப்படும். அந்நாளிலிருந்து அவர் இயக்கத்தின் உறுப்பினராகக் கருதப்படுவார். அடுத்த ஒரு வாரத்தில் தலைமை அலுவலகத்திலிருந்து, மாவட்ட பொறுப்பாளர்கள் மூலமோ அல்லது, தபாலின் மூலமோ அவருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.

பிரிவு :3     குறிப்பிட்ட கிளையில் உறுப்பினராகச் சேர விரும்புவோர் அந்தப் பகுதியில் குடியிருப்பவராக    இருக்க வேண்டும். தான் குடியிருக்கும் இடத்தில் இயக்க கிளை இல்லையென்றால் மாவட்டத்திற்குட்பட்ட ஏதாவது ஒரு கிளையில் அந்நபர் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளலாம்.

பிரிவு : 4   பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்க்கைப் படிவம் அதற்குரிய சந்தாத் தொகையுடன், மாவட்ட அமைப்பிலிருந்து, தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். படிவம் மட்டும் அனுப்பினால் அது ஏற்றுக் கொள்ப்படாது. அப்படிவமோ, பணமோ வந்து சேர தவறினால் மாவட்ட அமைப்பில் இதற்கென நியமிக்கப்பட்ட பொறுப்பாளரே பொறுப்பாவார்.

பிரிவு :5     உறுப்பினர் அடையாள அட்டையில் நிறுவுனர், தலைவர் கையொப்ப மிடுவார்.

விதி 9: உறுப்பினர்  நீக்கம்

அமைப்பினுடைய கொள்கைகளுக்கும், விதிகளுக்கும் எதிராகச் செயல்படும் உறுப்பினர்கள் அமைப்பிலிருந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நீக்கப்படலாம். தற்காலிக நீக்கத்திற்கு முன்பு விசாரணை நடத்த வேண்டுமென்ற கட்டாயமில்லை. அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள மாவட்ட நிர்வாக குழு பரிந்துரையின் பேரில் தலைமைக் குழுவுக்கு உரிமை உண்டு. மேலும் அவ்வாறு நீக்கப்பட்ட நபர் தலைமைக்கு முறையீடு செய்யலாம். ஒழுங்கு நடவடிக்கையில், அந்நபர்மீது சாட்டப்பட்ட குற்றம் உண்மைதான் என்பதை, முறையான விசாரணை மூலம் கண்டறியப்பட வேண்டும்.  தற்காலிக நீக்கம் 6 மாதங்களுக்கு மேல் நீட்டிக்கப்பட இயலாது. அவ்வாறு நீக்கப்பட வேண்டுமெனில் ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும். மாநில நிர்வாகக் குழுவிற்கு உதவிட ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்படலாம். மாநில நிர்வாக குழுவின் முடிவே இறுதியானது.