Action-Plan

செயற்திட்டங்கள்

பிரிவு :1     அனைத்து மக்களின் உரிமைகளை, பாதுகாக்கவும், தேசத்தை கட்டி எழுப்புவதில் அவர்தம் பங்களிப்பை உறுதி செய்யவும், அரசியல் பயிற்சி அளித்து அறவழியில் போராடும் ஓர் இலட்சியமிக்க சமூகத்தை உருவாக்குவது.

பிரிவு :2     அனைத்து மக்களின் மனித மாண்பு, அரசியல் விழிப்புணர்வு, சமூக ஈடுபாடு, பொருளாதார மேம்பாடு இவற்றை வளர்த்தெடுத்து முழு மனித விடுதலையை உறுதி செய்கின்ற திட்டங்களை வகுத்துச் செயல்படுவது.

பிரிவு : 3   வகுப்புவாத அரசியலையையும், மதவாத சக்திகளின் கொள்கை நகர்வுகளையும், அமைப்புகளையும், நடைமுறைகளையும், சதித் திட்டங்களையும் முறியடிக்க நீண்ட காலப் பார்வையோடு பலமுனை செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், கண்காணிப்புக் குழுக்களை அமைத்து ஆக்கபூர்வமாக செயல்படுவது.

பிரிவு : 4   மனித உரிமைகள், சிறுபான்மை உரிமைகளுக்கு எதிரான சட்டங்கள், செயற்பாடுகள், அடக்குமுறைகள் ஆகியவற்றை மக்கள் சந்திக்கும் போது, அவர்தம் போராட்டத்தில் உறுதுணையாக நிற்பதுடன், அவர்களை ஆற்றல்படுத்தும் விதத்தில் சட்டச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தலையீடுகளை மேற்கொள்வது.

பிரிவு : 5   அநீதி, லஞ்சம், மற்றும் ஊழல் நடைபெறும் இடங்களில் கண்டு கொள்ளாமல் அமைதி காக்கும் நிலையை மாற்றி, நீதிக்குக் குரல் கொடுத்து போராடும் இலட்சியமிக்க ஒரு சமூகத்தை உருவாக்கிடப் பல்வேறு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொள்வது.

பிரிவு : 6   சமுதாயத்தில், நிலவும் எல்லாவிதமான சாதிய அடையாளங்ளையும், தீண்டாமையின் எச்சங்களையும் துடைத்தெறிந்து, சுதந்திரம், நீதி சமத்துவம் சகோதரத்துவம்போன்ற அடிப்படை மதிப்பீடுகளைச் செயல்படுத்துவது.

பிரிவு : 7   மனித மாண்புக்கும், மக்கள் உரிமைகளுக்கும் எதிரான ஊடகங்களின் செயற்பாடுகளையும், கலாச்சார சீரழவுகளையும், வலுவாக எதிர்கொண்டு மண்ணையும், மக்களையும், சார்ந்த நேர்மறை மதிப்பீடுகளை வளர்தெடுக்க ஆக்கப்பூர்வமான செயற்திட்டங்களை மேற்கொள்வது.