குடும்ப வன்முறை – வரதட்சனை கொடுமையால் ஏற்படும் மரணம் 24

குடும்ப வன்முறை – வரதட்சனை கொடுமையால் ஏற்படும் மரணம் 24
சட்ட‍ம் பற்றிய முன்னுரை 
காலம் காலமாக வரதட்சனை காரணங்களுக்காக பெண்கள், கொடுமைப்படுத்த‍ப்பட்டும்  கொல்ல‍ட்டும் வந்திருக்கிறார்கள். இந்திய தண்டனைச் சட்ட‍த்தின் சட்ட‍ப்பிரிவு 304 பி (ஐ.பி.சி.) அத்தகைய கொடுஞ்செயல் புரிவோரை தண்டிக்கிறது. திருமணமான ஏழு ஆண்டுகளுக்குள் மரணம் ஏற்பட்டாலோ, மரணத்திற்கு முன் வரதட்சனைக்காக கணவனால் அல்ல‍து உறவினர்களால் கொடுமைப்படுத்த‍ப்பட்டிருந்தாலோ அது வரதட்சனை கொடுமையால் ஏற்பட்ட‍ மரணமாக கருதப்படும்.
சட்ட‍ம் பற்றிய விரிவான விளக்க‍ங்கள் 
* வரதட்சனை தடுப்புச் சட்ட‍ம், திருமணம் தொடர்பாகத் தரப்படும் சொத்துக்கள் அல்ல‍து பினைத் தொகை ஆகியவற்றை வரதட்சனை என்று வகைப்படுத்துகிறது.
*. இந்திய தண்டனைச் சட்ட‍த்தின் சட்ட‍ப்பிரிவு 304பி (ஐ.பி.சி.) படி திருமணமான ஏழு ஆண்டுகளுக்குள் தீப்புண்கள் மற்றும் காயங்கள் அல்ல‍து இயற்கை அல்லாத வகையில் மரணம் ஏற்பட்டால் அது வரதட்சனை கொடுமையால் ஏற்பட்ட‍ மரணமாக கருதப்படுகிறது.
* மரணத்திற்கு முன் வரதட்சனைக்காக கணவனால் அல்ல‍து உறவினர்களால் கொடுமைப்படுத்த‍ப்பட்டிருந்தாலும் அது வரதட்சனை கொடுமையால் ஏற்பட்ட‍ மரணமாக கருதப்படும்.
* வரதட்சனை கொடுமையால் ஏற்பட்ட‍ மரணங்களுக்கு கடுமையான்ன‍ தண்டனைகள் வழங்கப்படுகின்றன• குற்ற‍ங்கள் நிரூபிக்க‍ப்பட்டால், கணவனுக்கும் உறவினர்களுக்கும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க‍ப்படலாம்.
தீர்வுக்கான வழிமுறைகள் 
எந்த சட்ட‍ப்பிரிவுகளின் கீழ் புகார் செய்ய‍லாம்?
1880ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்ட‍த்தின் (ஐ.பி.சி.) சட்ட‍ப்பிரிவு 304பி மற்றும் 1973 ஆம் ஆண்டின் குற்ற‍வியல் நடைமுறைச் சட்ட‍ப் பிரிவு (சி.பி.சி.) 154 ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யலாம்.
யாரிடம்- எப்போது புகார் செய்யலாம். 
1. அருகிலுள்ள காவல்நிலையத்தில் எழுத்துப் பூர்வமாக அல்ல‍து வாய்வார்த்தையாக புகார் செய்ய‍லாம்.
2. முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்ய‍லாம்.
3. சம்பந்தப்பட்ட‍ அதிகாரி புகாரைப் பெறாவிட்டால் மாவட்ட‍ காவல் ஆணையாளருக்கு, நேரிலோ அல்ல‍து தபால் மூலமோ புகாரை அனுப்பிப் பதிவு செய்ய‍லாம்.
4. காவல்துறை புகாரைப் பெற மறுத்தால், மாஜிஸ்ட்ரேட்டை அணுகி காவல்துறைக்கு உத்த‍ரவிட்டு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வைக்க‍லாம்.
5. காவல்துறைமுதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்ய மறுத்தால், உயர்நீதிமன்றத்தை அணுகி காவல்துறைக்கு உத்த‍ரவிட்டு பதிவு செய்ய வைக்க‍லாம்.
6. குற்ற‍ம் தொடர்பான அனைத்து தகவல்களையும் எடுத்துக் கூறி அவை அனைத்தும் முதல் தகவல் அறிக்கையில் காவ‌ல்துறையில் பதிவு செய்ய‍ப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
7. முதல் தகவல் அறிக்கையின் ஒரு நகலை பெற்றுக் கொள்ள புகார் அளிப்பவருக்கு முழு உரிமை உண்டு.
8. குற்ற‍த்தில் ஈடுபட்ட‍வர்களின் பெயர் முகவரி போன்ற விபரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
9. குற்ற‍ம் நடைபெற்ற‍ நாள், தேதி, இடம், நேரம் போன்ற விபரங்களையம் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
10. வரதட்சனை மரணம் ஏற்படுத்த‍க் கூடிய காரணங்கள், உதாரணமாக சொத்துக்களுக்காகவா அல்ல‍து பணத்திற்காகவா என்பது பற்றியும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
11. மரணமடைந்தவர் உடலில் காணப்பட்ட‍ காயங்கள் அல்ல‍து தடங்கள் பற்றியும் குறிப்பிட வேண்டும்.
12. மரணத்தைப் பற்றி சாட்சியளிக்கக் கூடியவர்கள் பற்றியும் குறிப்பிட வேண்டும்.
13. குற்ற‍த்தைப் பற்றி தெரிந்த எவர் வேண்டுமானாலும் புகார் செய்ய‍லாம்.
வ‌ழக்கை எவ்வாறு பதிவு செய்வது?
* முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தவடன் காவல்துறை விசாரணையை தொடங்கும்.
* சட்ட‍ப்பிரிவு 304பி-ன் கீழ் செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய‍ப்படும்.
* காவல்துறை கீழ் காண்பவற்றை நிரூபிக்க வேண்டும்.
> தீப்புண்கள் மற்றும் காயங்கள் அல்ல‍து இயற்கை அல்லாத வகையில் மரணம் ஏற்பட்டுள்ள‍தை பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் நிரூபித்தல்
> திருமணமான ஏழு ஆண்டுகளுக்குள் மரணம் ஏற்பட்டுள்ள‍தை திருமணச் சான்று திருமணப் பத்திரிகை புகைப்படங்கள் ஆகியவை மூலம் நிரூபித்தல்
> கொடுமைகள் நடந்தது வரதட்சனை தொடர்பாகத்தான் என்று நிரூபித்தல்
> குற்ற‍ம் சாட்டியவர்கள் மேற்கண்டவற்றை நிரூபிக்கும் பட்சத்தில் கணவன் மற்றும் உறவினர்களால் வரதட்சனைக்காக மரணம் நிகழ்ந்ததாக நீதிமன்றம் கருதும்.
> இதற்கு மேல் தன் மீது கூறப்பட்டுள்ள‍ வரதட்சனை மரண குற்ற‍த்தை செய்யவில்லை என்று நிரூபிக்கும் பொறுப்பு குற்ற‍ம் சாட்ட‍ப்பட்ட‍ நபரையே சாரும்.
> இந்த குற்ற‍த்திற்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க‍ப்படலாம்.
> வரதட்சனை மரணம் தொடர்பான குற்ற‍ங்கள் அபராதம் செலுத்தத்தக்க‍ மற்றும் பினையில் விட இயலாத தண்டனைக்குரியவை. மேலும் சமாதான உடன்படிக்கை மூலம் தீர்க்க‍  முடியாதவை.
> வழக்குக்காக எந்தக் கட்ட‍ணமும் செலுத்த வேண்டியதில்லை.
மேல் நடவடிக்கைகள்
* உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு
* உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
* மாற்று வழியில் தீர்வுகள்
* காவல்துறை புகாரைப் பெறாமல் மறுக்கும் பட்சத்தில் சட்ட‍ச் சேவை ஆணையத்தை (லீகல் சர்வீஸ் அத்தாரிட்டி)  அணுகுவதைத் தவிர வேறு மாற்று வழித் தீர்வுகள் இல்லை.
*****
குடும்ப வன்முறைச் சட்ட‍ம் பிரிவு 498 அ 15
குடும்ப வன்முறைச் சட்ட‍மானது 1983ஆம் வருடம் இந்திய தண்டனைச் சட்ட‍த்தின்படி திருமணமான பெண்களுக்கு கணவனிடமிருந்தும் அவர்களின் குடும்பத்தாரின் கொடுமையிலிருந்தும் பாதுகாக்கும் வகையில் ஏறபடுத்த‍ப்பட்ட‍து.
நான்கு வகையான கொடுமைகள் விவரிக்கப்பட்டுள்ள‍ன•
1. ஒரு பெண்ணை தற்கொலைக்குத் தூண்டும் முறையில்
2. உயிருக்கு கேடு விளைவிக்கும் முறையில் நடந்து கொள்வது
3 ஒரு பெண்ணிற்கு காலை ஊனமாக்குதல் அல்ல‍து வேறு ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவிக்கும் செயலில் ஈடுபடுவது.
4. சொத்தினை வாங்கி தர வேண்டும் என்று பெண்ணையோ அல்ல‍து உறவினர்களையோ துன்புறுத்தினால் அவர்களுக்கு மூன்று வருடங்கள் வரை கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்க‍ப்படும். கொடுமைக்கான புகாரை அப்பெண்ணே கொடுக்க வேண்டும் என்பதில்லை உறவினர் எவரேனும் அவரின் சார்பில் கொடுக்க‍லாம்.
கொடுமைப்படுத்துதல் என்பது சட்ட‍ப்படி
* சாப்பாடு கொடுக்காமல் இருத்தல்
* தவறான முறையில் உடல் உறவுக்கு நிர்பந்தித்தல்
* பெண்ணை வீட்டிற்குள் வைத்து பூட்டுதல்
* குழந்தைகளிடம் செல்லுவதை தடுத்து கொடுமைப்படுத்துதல்
* பலம் கொண்டு தாக்குதல்
* அடித்தல், பயமுறுத்தல், பெண்களுக்கு மன உளைச்சல்  கொடுத்தல்
* சாதாரணமாக பேசுவதை தடைசெய்தல்
* பெண்ணின் முன் குழந்தையை திட்டுதல், அதனால் மன உளைச்சலை ஏற்படுத்துதல்
* குழந்தைக்கு தந்தையாக நடக்க மாட்டேன் என்று பெண்ணிடம் சொல்லி வேதனைப் படுத்துதல்
* பணம் கொடு இல்லையேல் விவாகரத்து என்று மிரட்டுதல்
யார் உதவலாம்?
* சேவை அமைப்புக்கள் உதவி செய்யலாம்.
* சேவை அமைப்பின் கடமைகள்
* பாதிக்கப்பட்ட‍ பெண்ணை நேரில் கண்டு முழுமையான தகவல்களின் அடிப்படையில் குடும்ப வன்முறை நிகழ்வு அறிக்கை தயாரித்தல்
* அப்பெண்ணிற்கு இச்சட்ட‍த்தின் கீழ் அளிக்கப்படும் நிவாரணங்கள் குறித்த தகவல்களை அளித்தல்
* பாதிக்கப்பட்ட‍ பெண்ணுக்கு தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்பு இல்ல‍ங்களில் தங்க அனுமதி பெற்றுத் தருதல்
* பாதிக்க‍ப்பட்ட‍ பெண்ணிற்கு தேவையான அடிப்படையில் மருத்துவ வசதிக்கு வழிவகுத்தல்
* குடும்ப வன்முறை நிகழ்வு அறிக்கையை காவல் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகாரியிடமும் அளித்தல்
சேவை அமைப்புகள் எவை?
பாதிக்கப்பட்ட‍ பெண்ணுக்கு உதவி புரிய உறுதுணையாக இருக்கும் தன்னார்வ அமைப்புகள் அல்ல‍து மாநில அரசின் பதிவுசெய்து கொண்ட அரசு சாரா அமைப்புக்களே சேவை அமைப்புக்களாகும்.
பாதுகாப்பு அலுவலரின் கடமைகள்
* பாதுகாப்பு இல்ல‍த்தில் அனுமதி பெற்றுத் தருதல், அத்தகவல்லை நீதிமன்ற நடுவருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்த‍ல்
* பாதிக்கப்பட்ட‍ பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, மருத்துவ அறிக்கையை நீதிமன்ற நடுவருக்கும் காவல்துறை அதிகாரிக்கும் அனுப்பி வைத்த‍ல்
* பணி நிவாரண உத்த‍ரவு நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டிருப்பின் அதை நடைமுறைப்படுத்த உறுதி செய்தல் .
* ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பாதுகாப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சமூக நலத்துறை அலுவலகத்தில் செயல்படுகிறார்.
* குடும்ப நிகழ்வு அறிக்கையை பரிந்துரைக்கப்பட்ட‍ படிவத்தில் முறையாக நீதிமன்ற நடுவருக்கும் அவற்றின் நகல்களை சம்பந்தப்பட்ட‍ காவல்துறை அதிகாரிகளுக்கும் சேவை அமைப்புக்கும் அனுப்பி வைத்த‍ல்.
* பாதிக்கப்பட்ட‍ பெண்ணிற்கு இலவச சட்ட‍ உதவி பெற்றுத் தருதல் மற்றும் சட்ட‍ரீதியான நிவாரணம் பெற வழிவகுத்தல்.
* சட்ட‍ உதவி சேவை அமைப்புகள், பாதுகாப்பு, இல்ல‍ம் மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவற்றின் பட்டியல்களை பராமரித்தல்
பாதுகாப்பு உத்த‍ரவு என்றால் என்ன? (பிரிவு 18)
பாதுகாப்பு உத்த‍ரவை கீழ்க்காண்பவற்றை பிறப்பிக்க‍லாம்.
குற்ற‍ம் சாட்ட‍ப்பட்ட‍வர்
* குடும்ப வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவது கூடாது.
* குடும்ப வன்முறை நடவடிக்க்கைகளைத் தூண்டுவதற்கு உடந்தையாக இருத்தல் கூடாது.
* அப்பெண் பணிசெய்யும் இடம், பாதிக்க‍ப்பட்ட‍வர் குழந்தையாக இருப்பின் அவர் பள்ளிக்கு அல்ல‍து அவர்கள் அடிக்கடி செல்லும் இடத்திற்கோ போக கூடாது.
* தகவல் தொடர்பு சாதனம் மூலம் தொடர்பு கொள்ள‍க்கூடாது.
* சொத்து, வங்கிக் கணக்கு, பாதுகாப்பு பெட்ட‍கம், சீதனம் போன்றவற்றை நீதிமன்ற அனுமதியின்றி  கையாளக் கூடாது.
* பெண்ணின் பாதுகாப்புக்கு வேறு கூடுதல் உத்த‍ரவு அளிக்கப்படலாம்.
* குடும்ப வன்முறையில் ஈடுபட மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கலாம்.
* காவல்நிலையத்திற்கு இந்த உத்த‍ரவை நடைமுறைப்படுத்த‍ உறுதுணையாக இருக்கும்படி உத்த‍ரவு இடலாம்.
* அப்பெண்ணிற்கு சொந்தமான சீதனப் பொருட்கள் சொத்துக்கள் பிற பத்திரங்களை ஒப்படைக்கும்படி உத்த‍ரவிடலாம்.
பண நிவாரணம் (பிரிவு 28)
* வருமான இழப்பு
* மருத்துவ செலவுகள்
* அவருக்கு சொந்தமான பொருட்களுக்கு ஏற்பட்ட‍ சேதம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஒரு தொகை வழங்க உத்த‍ரவிடலாம்.
* ஜீவனாம்சம் வழங்குவதற்கு உத்த‍ரவிடலாம்.
* அத்தொகையானது நியாயமானதாகவும் போதுமானதாகவும் ஏற்கனவே இருந்த வாழ்க்கைத தரத்தை அளிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்.
* ஒவ்வொரு மாதமாகவோ அல்ல‍து மொத்தமாகவோ பராமரிப்பு தொகை அளிக்க உத்த‍ரவிடலாம்.
* உத்த‍ரவு நகல் ஒன்றை இருதரப்பினருக்கும் காவல்துறையினருக்கும் அனுப்ப வேண்டும்.
* பிரதிவாதி பண உதவியை உத்த‍ரவில் குறிப்பிட்ட‍ காலத்திற்குள் அனுப்ப வேண்டும்.
* தவறும்பட்சத்தில் பணி அளிப்பவரை பிரதிவாதியின் சம்பளத்தின் ஒரு பகுதியை பாதிக்கப்பட்ட‍ பெண்ணிற்கு நேரடியாக அல்ல‍து நீதிமன்றத்தில் செலுத்தும்படி உத்தரவிடலாம்.
இழப்பீடு உத்த‍ரவு பிரிவு 22
குடும்ப வன்முறையால் ஏற்பட்ட‍ காயங்களுக்கான இழப்பீடு மனரீதியான உளவியல் ரீதியான சித்ரவதைக்கு நஷ்ட ஈடு வழங்க உத்த‍ரவிடலாம்.
நிவாரண உத்த‍ரவுகளைப் பெறுவதற்கான முறை பிரிவு 12
குற்ற‍வியல் நடுவருக்கு மனு செய்பவர்கள் பாதிக்கப்பட்ட‍ பெண், பாதுகாப்பு அதிகாரி, நபர்
* 3 நாட்களுக்குள் முதல் விசாரணை காணுதல்
* 60 நாட்களுக்குள் தீர்வு காணுதல்
* ஆற்றுப்படுத்துலுக்கு உத்த‍ரவிடுதல்
* குடும்ப நலனை மேம்படுத்தும் பணியில் உள்ள நபரின் உதவியினைப் பெறலாம் அவர் பெண்ணாக இருப்ப‍து நல்ல‍து.
* உள்ளாங்கு விசாணை
இடைக்கால உத்த‍ரவு பிரிவு 23
வ‌ழக்கின் அவசர சூழலைப் பொழுது இடைக்கால உத்த‍ரவைக் குற்றவியல் நடுவர் பிறப்பிக்க‍லாம்.
நீதிமன்ற அதிகார வரம்பு 
* பெண் நிரந்தரமாக தற்காலிகமாக குடியிருக்கிற அல்ல‍து வேலை பார்க்கிற இடம்
* பிரதிவாதி குடியிருக்கும் வேலை பார்க்கும் தொழில் செய்யும் இடம்
* வன்முறை நடந்த இடத்திலுள்ள குற்ற‍வியல் நடுவர் மன்றம் பெருநகர்க் குற்ற‍வியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்.
* இந்த உத்த‍ரவுகளை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்த‍லாம்.
மேல் நடவடிக்கைகள்
* ஆணை கிடைத்த 30 நாட்களுக்குள் மாவட்ட‍ நீதிமன்றத்தில் மேல்முறையீடு
* மாவட்ட‍ நீதிமன்றத்தின் ஆணைக்கெதிராக உயர்த்தி மன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
* உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
*****
இந்துப் பெண்களின் வாழ்க்கைப் பொருளுதவிக்கான உரிமைச் சட்ட‍ம் 1956 – 18
இச்சட்ட‍மானது மனைவி, குழந்தை, தாய், தந்தை ஆகியோருக்குப் பொருந்தும். இச்சட்ட‍மானது வாழ்க்கைப் பொருளுதவி என்பது உணவு, உடை, உறைவிடம், கல்வி, மருத்துவ கவனிப்பு மற்றும் சிகிச்சை எல்லாவற்றையும் உள்ள‍டக்கும். மணமாகாத மகளை பொறுத்த மட்டில் திருமணத்திற்கான செலவுகளை உள்ள‍டக்கும். சட்ட‍த்திலே பிரிவு 18ன் படி இந்து வாழ்க்கை பொருளுதவி சட்ட‍ப்படியும் பிரிவு 125 குற்ற‍வியல் நடைமுறைச் சட்ட‍த்தின் படியும் வாழ்க்கை பொருளுதவி கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றத்தினை அணுகி பெற்றுக் கொள்ள‍லாம்.
பிரிவு 18 மற்றும் குற்ற‍வியல் நடைமுறைச் சட்ட‍ம் பிரிவு 125
இச்சட்ட‍த்தின் படி கணவன், மனைவி உறவு பற்றியும் என்னென்ன கடமை என்பதனைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ள‍து. பிரிவு 125ன் படி மனைவியால் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும் போது வாழ்க்கைப் பொருளுதவி கேட்கலாம். விவாகரத்து பெற்று இருந்தாலும் ஜீவனாம்சம் கேட்கலாம். பிரிவு 125ன் படி கணவன் மனைவியை விட்டு பிரிந்து வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதன் காரணமாக மனைவி கணவருடன் சேர்ந்து வாழாமல் வாழ்க்கைப் பொருளுதவி கேட்கலாம். ஆனால் 18ன் படி 2ஆவது திருமணம் செய்திருப்பதை மனைவி நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். நிரூபிக்க‍ப்பட்டால் மட்டுமே பொருளுதவி கணவரிடமிருந்த்து பெறலாம்.
பிரிவு 125ன் படி மகளை பாதுகாக்க தந்தை கடமைப்பட்ட‍வர். அவர் இளவராக இருக்கும் வரை, பின்பு 18வயதிற்கு மேல் பெண்ணிற்கு ஆகிவிட்டால் அவர் மனநிலைப் பாதிக்கப்பட்டிருந்தாலோ அவரால் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாத பட்சத்தில் தந்தை மகளுக்கு ஜீவனாம்சம் கொடுக்க கடமைப்பட்ட‍வர்.
வாழ்க்கை பொருளுதவி பெறுவதற்கான உரிமைச் சட்ட‍ம் 1956 சம்பந்தப்பட்ட‍ கேள்வி பதில்கள் 
1. எவ்வளவு தொகை பொதுவாக ஜீவனாம்சமாக கொடுக்க‍ப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் உத்த‍ரவிடப்படுகிறது?
குற்ற‍வியல் நடைமுறைச்சட்ட‍ம் பிரிவு 125ன் ரூ.500- ஒவ்வொரு மனுதாரருக்கும் (ரூ.1500-) மேற்கு வங்காளத்தில்) அதிகபட்சமாக வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ள‍து. பொதுவாக கணவரின் வருமானத்திலிருந்து 1-3 பங்காக ஜீவனாம்சமாக விவாகரத்து பெற்ற பின்பும் வழங்க உத்த‍ரவிடப்படுகிறது. இவை மொத்தமாகவும், குறிப்பிட்ட‍ காலத்திற்குள் வழங்கப்படலாம்.
2. விவாகரத்து பெறாமல் வாழ்க்கை பொருளுதவி (ஜீவனாம்சம்) பெற முடியம்.
இச்சட்ட‍த்தின் படி பெற முடியும் கணவருடன் சேர்ந்து வாழும் பொழுதும் அவரிடமிருந்து பெற முடியும். ஆனால் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு (அதாவது கணவனால் ஒதுக்கி வைக்க‍ப்படும் பொழுது கொடுமைப்படுத்த‍ப்படும்போது அல்ல‍து வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் பொழுது) கேட்க முடியும் சட்ட‍ப்படி பிரிந்து இருந்தாலும் ஜீவனாம்சம் பெற முடியும்.
3. நான் சம்பாதித்த பொழுதிலும் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற முடியுமா?
முடியும். எப்ப‍டியெனில் உங்களது வருமானத்தினை கணக்கில் கொண்டு ஜீவனாம்சம் வழங்க உத்த‍ரவிடப்படும்.
4. வீட்டில் வசிப்பதற்கு உரிமை கோரி ஜீவனாம்சம் வழக்கில் கேட்கப்படலாமா?
ஆம் விவாகரத்தோ அல்ல‍து சட்ட‍ப்படியான பிரிந்திருக்கும் பொழுது தனியாக வாழ்வதற்கு வீடு கேட்கலாம். கணவரும் மனைவி வாழ்வதற்கு வீடு கொடுக்க‍ கடமைப்பட்ட‍வர். அவ்வாறு செய்யாத பொழுது நீதி மன்றமே கணவர் வசிக்கும் வீட்டின் ஒரு பகுதியில் மனைவி வசிக்க உத்த‍ரவிடலாம். ஆனால் கணவன், மனைவியின் உத்த‍ரவு இல்லாமல் அப்பகுதியில் நுழைய முடியாது. வீடு மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அதிலிருந்து கணவன், மனைவியை விரட்ட முடியாது. கணவன் தன் சொந்த பணத்தில் வீட்டை மனைவி பெயரில் வாங்கியிருந்தாலும் மனைவியை விரட்ட முடியாது.
5. எந்தெந்த செலவினங்களுக்காக ஜீவனாம்சம் கேட்கலாம்?
ஜீவனாம்சமானது இன்றியமையாத தேவையான உண்ண உணவு உடை இருப்பிடம் வைத்தியச் செலவு போன்றவற்றிகு கேட்கலாம். குழந்தைகளை பராமரிக்க‍வும் கணவரிடமிருந்தும் ஜீவனாம்சம் கேட்கலாம். இடைக்கால வாழ்க்கைப் பொருளுதவி மற்றும் வழக்கிற்கான செலவினையும் கேட்கலாம்.
நீதிமன்றதிதல் எவ்வாறு ஜீவனாம்சத் தொகையினை நிர்ணயிக்கின்றது?
அ. நீதிமன்றங்களில் பலவித காரணிகளை ஆராய்ந்து ஜீவனாம்சம் வழங்கப்படுகிறது.
ஆ. கணவரது சொத்து மற்றும் வருமானத்தின் அடிப்படையில்
இ. உங்களது சொந்த வருமானம் மற்றும் சொத்தின் அடிப்படையில்
ஈ. தரப்பினரின் நடத்தையினைப் பொறுத்து, தவறான நடத்தையின் காரணமாக ஜீவனாம்சம் தொகை தராமல் மறுக்கும் பொழு
உ. பொருளாதார அடிப்படைஇல் திருமணத்திற்கு முன்பு எதிர்பார்ப்பின் அடிப்படையில் ஜீவனாம்சம் வழங்கப்படும்.
1. எவ்வாறு கணவரது பொருளாதார தகுதியினை, ஜீவனாம்சம் கேட்கும் பொழுது நிரூபிப்பீர்கள்?
க‌ணவரது பொருளாதார தகுதி மனைவிக்கு தெரியவில்லை. எனில், அவர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் கணவரது சம்பளம் விவரம், வருமான வரி, மற்றும் ஆயுள் காப்பீடு பங்குகள் மற்றும் நிரந்தர வைப்பீடுகள் மற்றும் வங்கி கணக்கு போன்றவை தாக்கல் செய்ய உத்த‍ரிடச் செய்ய‍லாம். மற்றும் விமானத்தில் பயணம், கேளிக்கையில் பங்கு  கொள்ள‍ல் (5 நட்சத்திர தகுதியுள்ள‍ விடுதிக்கு செல்ல‍ல்) கிளப்பில் உறுப்பினராக இருந்தால் அது சம்பந்த விவரம், கிரெடிட் கார்டு மற்றும் எத்தனை கைபேசி வைத்திருக்கிறார் அல்லது வாகனங்கள் என்ன‍ வைத்திருக்கிறார். அவை சம்பந்தமான ரசீதுகளை நீதி மன்ற‌ம் கேட்கலாம்
2. நீதிமன்ற உத்த‍ரவிற்குப் பின்பும் ஜீவனாம்சம் வழங்காமல் கணவர் இருந்தால், என்ன‍ நடவடிக்கை எடுப்ப‍து?
ஜீவனாம்சம் கொடுக்கவில்லையெனில் கணவரது சொத்தினை தொகை ஈடாக கேட்டு நீதிமன்றத்தின் அனுமதியுடன் வைக்க‍லாம். இதனால் அந்தச் சொத்தினை 3ஆவது நபருக்கு விற்க முடியாது. ஜீவனாம்சம் செலுத்துவதிலிருந்து தவறும்பட்சத்தில் கணவரது சொத்தினை மனைவி நீதிமன்ற ஆணையின் மூலம் சொத்தினை விற்று தனக்கு சேர வேண்டிய பணத்தினை எடுத்துக் கொள்ள‍லாம்.
3. ஜீவனாம்ச தொகையினை மொத்த‍மாகவோ அல்ல‍து மாதாமாதம் பெற்றுக் கொள்ளலாமா?
பொதுவாக ஜீவனாம்சம் தொகையினை மொத்தமாக கணவரிடம் வாங்குவதே சிறந்தது. ஒரு தடவை கொடுத்த‍ பணத்தினை திரும்ப அவரால் வாங்க முடியாது.
4. இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பின்பும் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முடியுமா?
கேட்க முடியாது. மனைவி 2வது திருமணம் செய்யும் பட்சத்தில் கணவர் நீதிமன்றத்தின் மூலம் ஜீவனாம்சம் உத்த‍ரவின்னை ரத்து செய்ய முடியும்.
5. விதவைகள் ஜீவனாம்சம் பெற உரிமையுள்ள‍தா?
ஒரு இந்து குடும்பத்தில் விதவையின் மாமனாரிடம் அவரது கணவரின் பங்கிலிருந்து ஜீவனாம்சம் கேட்கலாம். ஆனால் அவரிடம் இல்லாத பட்சத்தில் அந்த விதவையின் தாய், தந்தை மற்றும் குழந்தைகளை பராமரிக்கலாம். விதவை 2ஆம் திருமணம் செய்யும் பட்சத்தில் ஜீவனாம்சம் கேட்க முடியாது.
6. மகளுக்கு ஜீவனாம்சம் பெற என்னென்ன உரிமைகபள் உள்ள‍து?
திருமணமாகாத மகளாக இருந்தால் தந்தையிடமிருந்து (உணவு, உடை இருப்பிடம்) ஜீவனாம்சம் திருமணமாகும் வரை பெறலாம். திருமணத்திற்கான செலவினையும் கூட்டுக் குடும்பச் சொத்து இருக்குமாயின் அதில் தந்தையிடமிருந்தும் பங்கு கேட்கலாம்.
****
இந்து பெண்களுக்கான சொத்துரிமைச் சட்ட‍ம் 5
எந்தவொரு சமுதாயத்திலும் பெண்கள் பெற்றிருக்கும் இடம் தான் அச்சமுதாயத்தின் நாகரீக மேம்பாட்டை உலகிற்கு தெள்ளத் தெளிவாக கண்ணாடி போல் காட்டும். எந்த அளவிற்கு சொத்து மற்றும் மற்ற‍வற்றில் உரிமை மற்றும் பாதுகாப்பு கௌரவம் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறாளோ அந்த அளவிற்கு அந்த சமுதாயம் உயர்ந்து இருக்கும். பெண்களின் சட்ட‍த்தகு நிலை (லீகல் ஸ்டேட்டஸ்)  அவர்கள் பெற்றிருக்கும் உரிமைகள், கட்டுப்பாடுகள், சமுதாயத்தில் மற்றும் குடும்பத்தில் பெற்றிருக்கும் தகுதி, சொத்துரிமை ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்க‍ப்படும் சமூகத்தில் பெண்களுக்கு தக்க மதிப்பு தரப்படல் வேண்டும். மேலும் ஆண்களுக்கு நிகராக நடத்தப்பட வேண்டும்.
இவ்வுலகிலே சீறும் சிறப்புமாக வாய்ந்தவர்கள் யாரென்று கேட்டால் அனைவருமே நம்மை பெற்றெடுத்த தாய்மார்களைத் தான் கூறுவோம். தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனிச்சிறப்பு மனித குலத்தின் ஆரம்பக் கட்ட‍த்தில் சமூகத்தில் தான் இன்றைய பெண் கடவுள்கள் தோன்றின• கருவறை, முதல் கல்ல‍றை வரை ஒவ்வொரு மனிதரின் வெற்றிக்கு பின்புலத்திலும் பெண்ணின் பங்கு உண்டு என்பது உலகறிந்த உண்மை. சமூகத்தில் பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள் பெண்கள் என்பதற்கு எவ்வித ஐயமுமில்லை. இவ்வாறு வளர்ச்சிப் பாதையில் சமுதாயத்தை இட்டுச் செல்லும் பெண்கள் பாதுகாப்போடு நடத்த‍ப்பட வேண்டியது மிகவும் அவசியம்.
நிலம் மற்றும் சொத்துரிமை 
பொதுவாக பல இந்திய குடும்பங்களில் பெண்களுக்கு சொத்தாக அவர்களின் பெயரில் சொத்து இருக்காது. மூதாதையரின் சொத்திலிருந்து பங்கு கேட்க முடியாது. சட்ட‍த்தின் நலிவிழந்த தன்மையில்ல் காரணமாக பெண்கள் சொத்துக்களை அடைய சிறிய வழிகளே இருந்தன• சில சட்ட‍ங்கள் பெண்களுக்கு எதிராக சொத்துரிமை மற்றும் நிலம் சம்பந்தமாக சட்ட‍ங்கள் உள்ள‍ன•
இந்துக்களுக்கு 1956 மத்தியில் சொத்துக்களை பெறுவதற்கு வழிவகை செய்ய‍ப்பட்ட‍ன• (இந்துக்கள் புத்த‍ர்கபள், சீக்கியர்கள் மற்றும் ஜெயின் போன்றவர்களுக்கு இச்சட்ட‍த்தின் மூலம் சொத்துரிமை பெற முடியும்). மூதாதையர்களின் சொத்த‍னை பொறுத்த வரை மகனுக்கு அனுபவிக்க சுதந்திரமான உரிமை இருந்தது. ஆனால் மகளைப் பொறுத்த‍வரையில் தந்தையின் சொத்தின் வழியே உரிமையிலிருந்து தந்தை மகளுக்கு மறுக்கும் பட்சத்தில் சொத்துரிமை கேட்க முடியாது. ஆனால் மகனுக்கு சொந்த உரிமையில் கிடைத்தது. திருமணமான பெண்கள் சம்பந்தமான வரதட்சனை கொடுமைகள் அனுபவிக்கின்றன• பெண்கள் தங்குவதற்கு கூட உரிமையில்லை.
தமிழ்நாட்டில் தான் முதன்முறையாக முதலமைச்சராக இருந்த திரு. மு. கருணாநிதி அவர்கள், ஜனவரி 27, 1989ல் ஆட்சிக்கு வந்ததும் இந்து உரிமை இறக்க‍ச் சட்ட‍த் திருத்த‍ம் 1989 கொண்டு வந்தார். குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்றார். அரசிதழில் (கெஜெட்டில்) ஜனவரி 16, 1990 அன்று வெளியிட்டு அமுலுக்கு கொண்டு வந்தார். அன்றுமுதல் தந்தை வழி வரும் மூதாதையர் சொத்திலும், பெண் பிள்ளைகளுக்கு ஆண்பிள்ளைக்ளுக்கு நிகராக சம உரிமை உண்டு. சட்ட‍ சமநிலை , தமிழ்நாட்டில் ஏற்பட்ட‍து. ஆனால் அந்த நாளுக்கு முன்னதாக திருமணமான பெண்களுக்கு இந்தச் சட்ட‍ம் பொருந்தாது  என்று கூறப்பட்டது.
பின்னர் நாடாளுமன்றம் இந்து உரிமை இறக்க‍ம் (திருத்த‍) சட்ட‍ம் 2005 (தி ஹிந்து செக்ஷ்ஷ‍ன் அமெண்ட்மெண்ட் ஆக்ட்)  கொண்டு வரப்பட்ட‍து. இச்சட்ட‍ம் செப்டம்பர் 9, 2005 அன்று எல்லா மாநிலங்களிலும் அமலுக்கு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த இருந்து உரிமை இறக்க‍ம் (திருத்த‍ச் ) சட்ட‍ம் 2005 இந்து உரிமை இறக்க‍ச் சட்ட‍ம் 1955 யை திருத்தியது. இந்து பெண்கள் ஆண்களுக்கு நிகராக மூதாதையர் சொத்திலும் சம உரிமை பெறுவார்கள் என்றுள்ள‍து.
கூட்டுக் குடும்பச் சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பங்கு உண்டு  என்று இந்து உரிமை இறக்க‍ச் சட்ட‍ம் தருத்த‍ப்பட்ட‍ பிறகு ஆண் பிள்ளை வசிக்கும் கூட்டுக் குடும்ப வீட்டில் அந்த ஆண் பிள்ளையே முன்வந்து பாகம் பிரித்துக் கொடுக்கும் வரை பெண்கள் பாகம் கோர முடியாது என்று சொல்ல முடியுமா?
இந்து உரிமை இறக்க‍ச் சட்ட‍ம் 1955ன் படி பிரிவு 22யை (செக்ஷன் 23, ஆஃப் தி ஹிந்து செக்ஷ்ஷன் ஆக்ட் 1955) அறவே இந்த உரிமை இறக்க‍ (திருத்த‍)சட்ட‍ம் 2005 ல் செப்டம்பர் 9, 2005 முதல் நீக்கி விட்ட‍து. பிரிவு 23ல் கூட்டுக்குடும்ப ஈட்டில் ஆண் பிள்ளைகள் வசித்து வந்தால், அந்த வீட்டை அவர்கள் விரும்பி பாகம் பிரித்துக் கொடுக்கும் வரை பெண் பிள்ளைகளுக்கு அந்த வீட்டில் பாகம் கேட்கும் உரிமை இல்லை என்று கூறியது. இந்தப் பிரிவு இப்பொழுது இல்லை.
ஆண் பிள்ளைகள் வசிக்கும் கூட்டுக் குடும்ப வீட்டை ஆண் பிள்ளைகள் பாகம் பிரித்துக் கொடுக்கும் வரை பெண் பிள்ளைகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இப்பொழுது இல்லை. ஆதலால் பெண் பிள்ளைகள் பாகம் பெறலாம்.
******
சிறப்புச் சட்ட‍ங்கள் – பேறுகால சலுகைச் சட்ட‍ம் 21
தாய்மையும் குழந்தைப் பருவமும் சிறப்பு கவனம் மற்றும் உதவி தேவைப்படுபவன உன உலக மனித உரிமைகள் அறிவிப்பு 1948ன்படி பிரிவு 25(2) கூறுகிறது. சமுதாயத நலன்கருதி, மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளை அரசாங்கம் வழங்க வேண்டும். சில வகை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்குக்கு குழந்தைப் பிறப்பிற்கு முன் மற்றும் குறிப்பிட்ட‍ காலத்திற்கு பணிபுரியும் பெண்களுக்கு குழந்தைப் பிறப்பிற்கு முன் மற்றும் பிற்பட்ட‍ குறிப்பிட்ட‍ காலத்திற்கு பேறுகால மற்றும் பிற சலுகைகளுக்கான உரிமைகளை பேறுகால சலுகைகள் சட்ட‍ம் 1961 அளிக்கிறது.
சட்ட‍ விளக்க‍ங்கள் 
* சில வகை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பேறுகாலத்தில் சில வகைப் பயன்கள் பெற உரிமையுண்டு.
* பிரசவத்திற்கு முன் கீழ்காணும் சலுகைகளுக்கு உரிமையுண்டு.
* குழந்தைப்பிறப்பிற்கு 10 வாரங்களுக்குக் குறைவான நாட்களில் பெண்களுக்கு கடுமையான பணிகள் தரக்கூடாது.
* அவளுக்கு பிரசவத்திற்கு முந்தைய 6 வார காலத்திற்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு பெற உரிமையுள்ள‍து.
* பிரசவத்திற்கு முன் பணிக்கு வராத நாட்களுக்கு சராசரி தினக்கூலி அடிப்படையில் பேறுகாலச் சலுகையாக சம்பளம் வழங்க வேண்டும்.
* பிரசவத்தை பற்றியும் அதற்காக விடுப்பு எடுக்க‍ப்போகும் தேதியையும் நிறுவனத்துக்கு தெரிவித்தால் பேறுகால சலுகைத் தொகையை முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும்.
பிரசவத்திற்கு பின் கீழ்காணும் சலுகைகளுக்கு உரிமையுண்டு.
* பிரசவம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக செய்ய‍ப்படும் கருக்கலைப்பு போன்றவை நிகழ்வுக்கு பின், உடனடியான 6 வாரங்களுக்கு எந்த நிறுவனமும் பெண்கைப் பணி புரிய வைக்க‍க் கூடாது.
* 6 வாரத்திற்கான சலுகை ஊதியம், பிரசவம் நடந்ததற்கான ஆதாரம், அளித்த 48 மணிநேரத்திற்குள் அப்பெண்ணிற்கோ அல்ல‍து அவரது பிரதிநிதிக்கோ வழங்கப்பட வேண்டும்.
* பிரசவத்திற்கு பின் பணிக்கு வராத நாட்களுக்கு தினக்கூலி விதத்தில் வழங்கப்பட வேண்டும்.
* பிரசவத்திறன்கு முன் 6 வார கால விடுமுறை எடுக்காத பெண்க்ள், பிரசவத்திற்கு பின் அதையும் சேர்த்து, துவங்கிய நாளிலிருந்து 12 வாரங்களுக்கு மிகாமல் விடுமுறை எடுத்துக் கொள்ள‍லாம்.
* பிரசவத்திற்கு முன் மற்றும் பின் இலவமாக வழங்க வேண்டிய சலுகைகளை நிறுவனம் வழங்காத பட்சத்தில் மருத்துவ சலுகையாக ரூ.250 பெற்றுக் கொள்ள‍லாம்.
* கர்ப்பகால அல்ல‍து குழந்தைப் பிறப்பினால் ஏற்படும் நோய்கள், குறைப் பிரசவம், கருக்கலைப்பு, கருக்குழாய் அறுவை சிகிச்சை போன்றவற்றால் பாதிக்க‍ப்பட்டால், பிரிவுகள் 6 மற்றும் 9 கீழ் வழங்கப்பட்ட‍ விடுமுறையுடன் அதிகபட்சம் 1 மாதம் சம்பளத்துடன் கூடிய கூடுதல் விடுப்புக்கு உரிமையுண்டு.
* கர்ப்பகால ஓய்வுக்குப் பின் பணியில் சேர்த்த பிறகு குழந்தை 15 மாத வயது அடையும் வரை அதன் பராமரிப்புக்காக தினமும், குறிப்பிட்ட கால அளவில் இரண்டு முறை கூடுதலாக இடைவேளை வி ட வேண்டும்.
*  பேறுகால விடுமுறையில் இருக்கும் பெண்களை, அதனை காரணம் காட்டி வேலையை விட்டு நீக்க அல்ல‍து டிஸ்மிஸ் செய்ய இயலாது.
* பிரிவு 4படி கடுமையான வேலை செய்யாமை மற்றும் கூடுதல் ஓய்வு எடுத்த‍ல் போன்றவற்றுக்காக சம்பளம் அல்ல‍து கூலியில் எந்த பிடித்த‍மும் செய்ய‍க்கூடாது.
பிற சமயங்களில் 
குறைப்பிரசவம், கருக்கலைப்பு , கருக்குழாய், அறுவை சிகிச்சை போன்றவற்றால் பாதிக்க‍ப்ப‍ட்டு அதற்கு சான்றாக ஆவணங்கள் வழங்கப்படுமானால் உடனடியாக அடுத்த நாளிலிருந்து 2 வாரங்களுக்குள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை பெறலாம்.
தீர்வுக்கான வழிமுறைகள்
எந்த சட்ட‍ப் பிரிவுகளின் கீழ் புகார் செய்ய‍லாம்.
சட்ட‍ப்பிரிவு 17 அதற்கான நியமிக்க‍ப்பட்ட‍ ஆய்வாளரிடம் புகார் செய்வது பற்றியது.
சட்ட‍ப்பிரிவு 23 சட்ட‍த்தின் அனைத்து பிரிவுகளையும் பயன்படுத்தியம் தீர்வு கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் புகார் செய்வது பற்றியது.
யாரிடம் எப்போது புகார் செய்யலாம். 
* பொதுவாக இச்சட்ட‍த்தின் கீழ் நிவாரணம் பெற விரும்பும் பாதிக்கப்பட்ட‍ பெண் அதற்கென நியமிக்கப்பட்ட‍ ஆய்வாளரை அணுகலாம். ஆய்வாளரின் தீர்வு திருப்தியளிக்காவிட்டால் அல்ல‍து பெரிய அளவில் சட்ட‍ சிக்க‍ல் இருந்தால், தகுந்த மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்ட்ரேட் அல்ல‍து முதன்மை ஜுடிஷியல் மாஜிஸ்ரேட் ஆகியோரை அணுகலாம். எனினும் அவ்வாறான வழக்குகள் குற்ற‍ம் நடந்த ஒரு வருடத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.
* பாதிக்கப்பட்ட‍ பெண் உறுப்பினராக உள்ள தொழில்சங்கம் 1860ஆம் ஆண்டின் சங்கப் பதிவுச் சட்ட‍த்தின் கீழ் பதிவு செய்ய‍ப்பட்ட‍ சமூக நிறுவனம் அல்ல‍து காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் பாதிக்கப்பட்ட‍ பெண் சார்பாக குற்ற‍ங்களைப் பற்றி நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்யலாம்.
* இச்சட்ட‍ம் வழங்கியுள்ள‍ அதிகாரப்படி ஆய்வாளர், பெண்கள் பணிசெய்யும் இடத்தில் நுழைந்து இச்சட்ட‍ப்படி பராமரிக்கப்பட வேண்டிய ஆவணங்கள், தாக்கீதுகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய‍லாம். அந்நிறுவனத்தின் எந்தப் பணியாளரிடமும் தொழிலாளர் விவரம், சம்பளம் அல்ல‍து அவர்களின் மனு அல்ல‍து தாக்கீதுகள் பற்றியும் அவர் விவரம் கேட்க முடியும் பேறுகால பயன்கள் மற்றும் பிற பட்டுவாடாவில் முறைகேடுகள் இருப்ப‍து கண்டுபிடிக்கப்ப்ட்டால் அவற்றை முறையாக வழங்க ஆணையிடலாம்.
வ‌ழக்கை எவ்வாறு பதிவு செய்வது? 
* இச்சட்ட‍ப்படி சலுகைகள் பெற, ஒரு வருட பேறுகாலத்தில் பிரசவத்திற்கு முன்பாக ஒரு பெண் குறைந்தது 80 நாட்கள் பணி செய்திருக்க‍ வேண்டும்.
* தன்னுடைய பிரசவம் தனக்குள்ள உரிமைகள் மற்றும் தான் விடுப்பு எடுக்க விரும்பும் காலம் ஆகியவை பற்றி, குறிப்பிட்ட படிவத்தில் உரிமையாளருக்கு தெரிவிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட‍ பெண்ணின் கடமை, பிரசவம் ஆனவுடன் உடனடியாக அதையும் தெரிவிக்க வேண்டும்.
* அவ்வாறு தாக்கீது அளிக்க‍த் தவறியிருந்தால், ஆய்வாளரிடம் விணப்பித்து தேவையான ஆணைக்கும் தொகையும் பெறலாம். ஆய்வாளரின் ஆணைகளுக்கெதிரான மேல் முறையீட்டை மேல்முறையீட்டு ஆணையத்திடம் ஆணை கிடைத்த 30 நாட்களுக்குள் செய்ய வேண்டும். மேல் முறையீட்டு ஆணையத்தின் முடிவே இறுதயானது.
* ஆய்வாளர் மற்றும் மேல்முறையீட்டு ஆணையத்தின் தீர்வு திருப்தியளிக்காவிட்டால் அல்ல‍து பெரிய அளவில் சட்ட‍ சிக்க‍ல் இருந்தால், பாதிக்க‍ப்பட்ட‍ பெண் தகுந்த நீதிமன்றத்தை அணுகலாம். சட்ட‍ நடைமுறைகளின் படி வழக்கு நடத்த‍ப்படும்.
* பேறுகால பயன்களை வழங்காதது மற்றும் பேறுகால பயன்கள் சட்ட‍த்திற்கு புறம்பாக விடுமுறை எடுத்த பெண்ணை வேலை நீக்க‍ம் செய்வது போன்ற குற்ற‍ங்களைச் செய்த உரிமையாளருக்கு 3 மாதங்களுக்கு மேல் 1 வருடத்திற்கு மேற்படாத சிறைத் தண்டனையும் ரூ.2,000- முதல் .ரூ.3,000  வரை அபராதமும் விதிக்க‍ப்படும்.
மேல் நடவடிக்கைகள் 
* ஆய்வாளரின் முடிவுகளுக்கெதிராக மேல் முறையீட்டிற்கு அனுமதியுண்டு.
* நீதிமன்றங்களில் வழக்க‍மான வழக்குகளைப் போல மேல் முறையீடு செய்யலாம்.
மாற்று வழியில் தீர்வுகள் 
ஆய்வாளர் மற்றும் மேல் முறையீட்டு ஆணையங்களின் நியமனம் மூலம், இந்த சட்ட‍த்திலயே மாற்று வழிமுறைகள் செய்ய‍ப்பட்டுள்ள‍ன• அவர்களின் முடிவில் திருப்தியடையாவிட்டால் மட்டுமே பாதிக்க‍ப்பட்ட‍ பெண் உரிமையாளர் எதிராக சட்ட‍ நடவடிக்கை மற்றும் நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகும் தேவை ஏற்படும். உதாரணமாக பேறுகாலப் பயன்களை கணக்கிடும்போது எந்த கால அளவை எடுத்துக் கொள்வது போன்ற சிலவகை விஷயங்கள் நீதிமன்றங்களில் தீர்க்க‍ப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட‍ பெண் தன்னுடைய வழக்கை நடத்துவதில் உதவ செய்ய‍க்கூடிய தான் உறுப்பினராக உள்ள தொழில்சங்கத்தையோ அல்ல‍து தன்னார்வ தொண்டு நிறுவனத்தையோ அணுகலாம்.